பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாதுகாப்புக்கல்வி

57


களிலேயே இருக்கின்ற விபத்துக்கான வாய்ப்புக்கள். (கோலூன்றித் தாண்டுதல், உயரத்தாண்டுதல், போன்ற நிகழ்ச்சிகள்).

மேலே கூறிய காரணங்களுக்கேற்ப, முறையான மாற்றுக் காரியங்களைச் செய்தால், விபத்துக்கள் நிகழாமல், முடிந்தவரை தவிர்த்து விடலாம்.

3. விபத்து நிகழாமல் தடுக்கும் வழிமுறைகள்

1. ஆர்வத்தாலும், அளவிலா சக்தி நிறைந்திருப்பதாலும், மாணவர்கள் விளையாடும்போது, விழுந்து விபத்திற்குள்ளாவது இயல்பாக நடப்பதுதான்.

போதிய கண்காணிப்பாளர்கள், பயிற்சியாளர்கள் பக்கத்தில் இருந்தால் அவ்வப்போது அவற்றினைச் சுட்டிக்காட்டலாம். மீறினால் தேவையான நடவடிக்கை எடுப்பதன் மூலம் தடுக்கலாம். தண்டிக்கலாம்.

2. தேவையான விளையாட்டு பொருட்களையும், கருவிகளையும், நல்ல தரமுள்ளதாக வாங்கி, அவற்றைத் தக்க முறையில் பராமரித்து வரவேண்டும்.

3. குறிப்பிட்ட விளையாட்டை விளையாடுவதற்கு முன்னர், இன்னின்ன முறையில் ஆடினால் இன்பமாக இருக்கும், இந்த முறையில் ஆடக்கூடாது என்றவாறு குறிப்புக்களை கொடுத்துவிடவேண்டும்.

இந்த விளையாட்டுப் பற்றிய அறிவினை, மாணவர்கள் வளர வளர பயிற்சியாலும் பழக்கத்தாலும்