பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாதுகாப்புக் கல்வி

61


வைத்திருக்க வேண்டிய அமைப்பு இருக்கும். அதனால், ஏதாவது கம்புகளோ அல்லது சாதனங்களோ துருத்திக்கொண்டு வெளியே வைக்கப் பட்டிருந்தால்,(அதாவது இரும்புக் குழாய், மின்கலக் கருவிகள் போன்றவை) அவைகளை மூடி, மெத்தை போன்றவற்றால் கட்டி, இடித்தாலும் மெத்தென்று இருக்கும் வகையில் ஏற்பாடு செய்து வைக்க வேண்டும்.

3. கண்ட கண்ட இடங்களில் விளையாட்டுக் கருவிகளைப் போட்டு வைக்காமல், தேவையான விளையாட்டுக் கருவிகளை வேண்டும்போது எடுத்துப் பயன்படுத்திவிட்டு, தேவை முடிந்ததும் பாயாக இருந்தால் உடனே சுருட்டிவைத்து, மற்ற ஏதாவது பொருளாக இருந்தால், அதற்கென்று உரிய இடங்களில் ஒதுக்கி வைத்து விடுவது நல்லது.

4. வருவோருக்கும் போவோருக்கும் போகவர வழி இருக்குமாறு, அரங்க அமைப்பு விளையாட்டு முறைகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

5. விளையாடும் பகுதிகளில் எல்லாம், நன்றாக வெளிச்சம் வரும்படி சுற்றிலும் விளக்குகள் பொருத்தியிருக்க வேண்டும்.

6. குளியல் அறை, சாமான்கள் அறை, மண்டப அறைகள் எல்லாம் தூய்மையுடன் விளங்குமாறு கண்காணித்து வரவேண்டும்.

7. குழப்பம் நேராமல், ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒவ்வொரு இடம் என்ற ஓர் உணர்வை ஊட்டுவதுபோல