பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


6. மேலேயிருந்து தண்ணீருள் குதிக்கும் போது.சுவற்றில் அல்லது உள்ளே பதித்துவைக்கப்பட்டிருக்கும் பொருட்களின் மீது மோதி, அல்லது அடித்தரை பாகத்தின் மோதி, மண்டை உடைந்து விடுதல்.

7. அல்லது அதனால் உள்ளுக்குள்ளேயே மூர்ச்சையாகிப் போதல்.

8. அல்லது கை கால் செயலிழந்து விடுதல் அல்லது கழுத்து முறிந்து போதல்.

9. தவறாகக் குதித்து, அடிவயிறு அடிபட்டு, உள்ளுறுப்புக்கள் தடுமாறி, இயங்காமல் போய்விடுதல்

10. பிறர் தண்ணீரில் மூழ்கும் போது, அவரைக் காப்பாற்றத் தனியாகப் போய், மாட்டிக் கொண்டு, மீள முடியாமல், அழுந்தி விடுதல்.

11. தண்ணீரில் ஒருவரை தலைமுழுக மூழ்கியபடி, எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்கிறார் என்று பந்தயம் கட்டி விளையாடும்போது, அதுவே வினையாகிவிடுதல்,

பொதுவாக நீந்தும் போது, மேலே கூறிய நிகழ்ச்சிகளால்தான் விபத்துக்கள் நேர்கின்றன. நீச்சல் குளங்களில் உள்ளது போலவே, இயற்கையான நீர்த் தேக்கங்களிலும், நீர்ச்சுழி, நீரின் வேகம், ஆழம், கீழே பாசிகள் போன்ற புதர்ப்பகுதிகள், சேறுகள் இருக்கும். இவற்றைப் புரிந்துகொண்டு பாதுகாப்புடன் நீந்தி மகிழவேண்டும்.