பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


மாக மேற்பார்வையிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, வீண் பேச்சு கொடுத்துக்கொண்டு, அவர்கள் கவனத்தைத் திசைதிருப்பக்கூடாது.

10. குறிப்பிட்ட நேரத்திற்குமேல், தண்ணீரில் இருக்கக் கூடாது.


5. நீந்தி முடிந்தவுடன்

1. நீந்தி முடித்து நீச்சல் குளத்தைவிட்டு வெளியேறி வந்தவுடன், முன்னர் குளித்த நீர்த்தாரைகளில் மீண்டும் நீராடி, தன் மேல் படிந்துள்ள பாசகம் போன்ற பொருட்களால், நிகழும் எரிச்சல் போன்ற தன்மையை நீக்கிய பிறகே உரிய ஆடையை அணிய வேண்டும்.

2. ஆடை அணிவதற்கென்று உள்ள அறைகள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் என்பதால், உள்ளே வீணே காலம் கழிக்காமல், சீவி சிங்காரம் செய்யாமல், விரைந்து வெளியே வரவேண்டும்.

நீச்சல் ஒரு பயன் மிகுந்த பொழுது போக்காகும். அதில் விபத்து நேருகின்றதென்றால், அது நமது அறியாமையாலும், அவசர புத்தியினாலும், அலட்சியப் போக்கினாலும் மட்டுமே நிகழ்வதாகும்.


6. நீச்சல் விபத்தும் முதலுதவியும்

6. நீரில் மூழ்கியவர்களுக்கு சுவாசம் விடுவது இழுப்பது எல்லாம் மிகவும் கஷ்டமாகவே இருக்கும்.