பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



72

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


அவரது மூக்கினை வருடி, கட்டை விரலால் சற்று அழுத்தியவாறே, ஊதுபவர் நன்றாக மூச்சை இழுத்துத் 'தம்' பிடித்துக்கொண்டு, மூழ்கியவர் நுரையீரலுக்குள்ளே காற்று போவதுபோல, வேகமாக ஊத வேண்டும்.

இவ்வாறு ஊதும்போது அவரது மார்பு உயர்வது போல ஊத வேண்டும். அப்படி உயரும்போது ஊதுபவர் தனது வாயை எடுத்து விட்டு, அவர் மூச்சை வெளியேவிட வாய்ப்புத் தர வேண்டும்.

இவ்வாறு 1 நிமிடம் வரை ஊதிவிட்டு, பிறகு 3 வினாடிகளுக்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் தொடர்ந்து ஊதவேண்டும்.

பெரியவர்களாக இருந்தால், ஒவ்வொரு மூன்று வினாடிக்கு 1 முறை வேகமாகவும், குழந்தையாயிருந்தால், ஒவ்வொரு இரண்டு அல்லது 2 வினாடிக்கு 1 முறை மெதுவாகவும், இதமாகவும் ஊதிக்காற்றைத் தந்து, சுவாசப் பயிற்சியைத் தரவேண்டும்.

2. முதுகுப்புறம் அழுத்தி விடும் முறை: மூழ்கிய வரைக் குப்புறப் படுக்க வைத்து, அவரது, தலைக்கருகில் முழுங்காலிட்டு நின்று, அவரது. தோள் பட்டைகளில் முதுகெலும்புக்கு 2 அங்குலத்திற்கு அருகில் இரண்டு புறமும், இரு கை, கட்டை விரல்களையும் வைத்து, முன்புறமாக அழுத்தவும்.

அவ்வாறு அழுத்தும்போது, அழுத்துபவர் உடல்எடை, படுத்திருப்பவர் மீது அழுந்த, அதனால் அவரது நுரையீரலுக்குள்ளே காற்று உள்ளே புகுந்திட வழி