பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பு கேட்காது, கொடுக்கும்! - 莎 வேணும்னுதான் அப்படி அடிச்சிருப்பாங்க. உங்க புத்திமதிக் கும் நான் எப்பவும் மதிப்புக் கொடுக்கக் கடமைப்பட்டவன். சரி, நான் மேலே போயிட்டு வர்றேன். எனக்காக-இல்லே. காப்பிக்காக-எல்லாரும் காத்துக்கிட்டிருப்பாங்க!...” "ஆமா, சீச்கிரம் போ, போய் வா!' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து நகரலானார் காசி. அவர் உள்ளத்திரையில் பாபு நிழலாடினான். பாவம், அநாதைப்பிள்ளை!...பகவானே. உன்னோட சோதனைக்கு ஓர் அர்த்தம் கண்டுபிடிக்கிறதுக்கு எனக்கே வயசு பத்தாதுன்னு நான் சதா நினைச்சுக்கிட்டிருக் கேன். ஆனா, இந்தப் பொடியன் எப்படி எப்படி அழகாய்ப் பேசறான்!...” என்று எண்ணமிட்டது அவரது உள் மனம், 岑 案 * பாபு மாடியைக் கடந்து நடந்தான். லினோலியம் விரிப்பு அவன் பாதங்களுக்குச் சுகமாக இருந்தது. என்றாலும் விரிந்திருந்த கைகளின் சூடு அவனுள் ஒர் அபாய அறிவிப் பாகப் பாய்ந்துகொண்டிருக்கத் தவறிவிடவில்லை. முந்திரிக் கொட்டை போல நீட்டிக்கொண்டிருந்த சட்டையின் காலரை நாக்கினால் அடக்கிவிட்டவண்ணம் நடையைத் தொடர்ந்தான் பையன், அதோ, கூடம். அதுதான் ஆனந்தரங்கம் - அபயாம்பாள் குடும்பத்தின் படுக்கைக் கூடம். அதில் அவர்களது செல்வப்புதல்வன் ராமனுக்கும் அருமந்தப்புதல்வி சீதைக்கும் பங்கு இருந்தது. இனம் புரியாத அச்சம் சூழ, பாபு அவ்வறையை எட்டிப் பார்த்தான். முதலாளி எங்கே?' என்று அவன் தனக்குத்தானே கேட்டுக்கொள்ள வேண்டியவன் ஆனான். காரணம், அங்கு அப்பொழுது லட்சாதிபதி ஆனந்தரங்கம் காட்சி தரவில்லை! காப்பிக்காக எதிர்பார்த்துக் காத்திருந்திட்டு, கோபமாகப் போயிருப்பாங்களோ? அட, கடவுளே! என்று வேறு பயமும் சேர்ந்தது. அதன் விளைவாக, அவனது சிறிய உடம்பு பெரிதாக நடுங்கியது. ஆகவே, மிகுந்த கண்காணிப்புடன்