பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பாபுஜியின் பாபு அவன் கூடத்தின் வெளியிலே கிடந்த முக்காலியில் வெள்ளித் தட்டை வைத்தான். அம்மா எங்கே?' என்ற வினாக் குறி யுடன் அவன் மெள்ள எட்டிப் பார்த்தான். அம்மாவையும் காண வில்லை!... - - - - - பாபுவுக்கு மேலும் பயம் வளர ஆரம்பித்தது. நேற்று இரவு எஜமானரும் எஜமானியும் பயங்கரச் சோகத்துடன் என்னவோ காதும் காதும் வைத்த மாதிரி பேசிக்கொண்ட நிகழ்ச்சியை அவன் நினைவூட்டிக்கொண்டான். படுத்துக் கொள்ளப் போகுமுன், அவர்களிடம் சொல்லிக்கொண்டு போக வந்தவன், ஏனோ பயந்து, சொல்லிக்கொள்ளாமலே உறங்கச் சென்றுவிட்டானே! - "ராமு!... சிதா!" பாபுவின் குரல் சன்னமாகவே ஒலித்தது. அந்தக் குரல் அடங்கவில்லை. அதற்குள் தொலைபேசி அறைத் தொடங்கிவிட்டது. பாபுவுக்குத் தர்மசங்கடமாகிவிட்டது. * தொலைபேசியைத் தொடுவதற்கு அவனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை. . எப்படி முடியும்? அவன் வேலைக்காரப் பையன். எடுபிடி! அம்மாவையும் காணோம்! ராமனையோ சீதையையோ எழுப்பினால், வந்தது வினை! பாவம், தொலைபேசி அலறிக்கொண்டே இருந்தது. அம்மாவைக் கூப்பிடலாம். அதுதான் நல்லது. பின்புறம் போயிருக்கக்கூடும். ஆமாம், அது தான் சரி. - அழைத்தான் பாபு. - - தல்ல வேளை, இல்லத்தின் தலைவியான அபயாம்பாள் ஓடோடி வந்துவிட்டாள். தொலைபேசிக் குரலுக்கு மேலாக,