பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ பாபுஜியின் பாபு அபயாம்பாள், சிறுவன் பாபுவை நிமிர்ந்து பார்த்தாள். மெல்லிய புன்னகை ஊடாடியது. அவளது உதடுகளிலே. நெற்றித் திலகம் மங்களம் பொலிய விளங்கிற்று. பாபு, எனக்குக் காப்பி வேணாம். பசங்களுக்கு ஆளுக்கொன்னு குடுத்திட்டு, பாக்கியுள்ள செட்டை நீ எடுத்துக்க!' என்று பரிவுடன் தெரிவித்தாள். பாபுவின் மேனி புல்லரித்தது. கண் விழித்ததும், அவன் தன்னுடைய கிழிசல் நிஜார்ப் பையிலிருந்து எடுத்துப் படித்த அந்தப் பொன்மொழியை ஞாபகப்படுத்திக்கொண்டான்; அன்பு என்பது ஒரு போதுமே கேட்பது இல்லை. எப்போதுமே கொடுக்கவே செய்யும்! என்று மெய்ம்மறந்து படித்ததை முணுமுணுத்துக்கொண்டான். பாபுஜி... காந்தித் தாத்தா!...” உணர்ச்சி வசப்பட்டு அப்படியே நின்று விட்டான் ஏழைப்பிள்ளை பாபு!