பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பாபுஜியின் பாடி பாபுவுக்குத் தன் எஜமானி அம்மாள் தன்னிடம் மீத முள்ள அந்த ஒரு காப்பியை எடுத்துக்கொள்ளும்படி கூறியது நெஞ்சிலேயே நின்றது. நாக்கு ஊறியது. மெதுவாக வெள்ளித்தட்டை ஒட்டி உட்கார்ந்துகொண்டான் அவன். என்னவோ பயம் வேறு உள்ளுக்குள் அரித்துக்கொண் டிருந்தது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, அந்தக் குவளையை எட்டி எடுக்கப் போனான். அதற்குள், ராமா!' என்று சீதையும், சீதா' என்று ராமனும் குரல் கொடுத்துக்கொண்டே, கைகளை நீட்டி, அந்தக் காப்பித் தம்ளரை இருவரும் பற்றிக்கொண்டார்கள். -அப் பாவோட ஸ்பெஷல் காப்பி கேவலம், வேலைக்காரப் பய லான உனக்கா வேனும்?... சீ!...” என்று துடுக்காகச் சத்தம் போட்டுக்கொண்டே பாபுவின் கைகளை அப்பால் தள்ளி விட்டான் ராமன். - ராமன் எப்போதுமே படுசுட்டி! சீதை பெண்பிறவி அல்லவா? பெண் இனத்துக்கே உரிய இரக்க குணம் கொண்டவள்; தாய்க்குலம் ஆயிற்றே! கருணையோடு பாபுவை நிமிர்ந்து பார்த்தாள். ராமனும் சீதையும் இரட்டைப்பிள்ளைகள்; இராமேசுவரத் தலயாத்திரை அருளிய செல்வக் குழந்தைகள். என்றாலும், ராமன் சிடுமூஞ்சி'. சீதை அப்படி அல்ல. அதனால்தான், இரக்கச் சித்தத்துடன் பாபுவை நிமிர்ந்து பார்த்துவிட்டு, அப்புற்ம் ராமனை-தன் அண்ணனைஏறிட்டு நோக்கினாள், தங்கை சீதை. . பாபுவுக்கு வேர்த்துக் கொட்டியது. ராமனின் செயலைக் கண்டதும், உடனே கெட்டிக்காரத்தனமாகத் தன்னுடைய கைகளை நகர்த்திக்கொள்ள இயலாமல் போய்விட்டதே யென்று வருந்தினான். பிஞ்சு நெஞ்சம் வெகுவாகக் குழம் பியது. இந்தக் காப்பியை எடுத்துக்கும்படி, அம்மா சொன்னாங்க!' என்று கூற வேண்டும் போல அந்த இளமனத் தின் ஒருபுறம் ஒரு நினைவு தூண்டியது; மறு விநாடி, அவ்