பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீடிக்காத பொய் 13 வெண்ணத்தை மாற்றியது, மனத்தின் மறு பகுதி. உன் கிட்டே எடுத்துத் தாரதுக்காகத்தான் காப்பித் தம்ளரை எடுக்க முனை ஞ்சேன். நான் கேவலம் அநாதை வேலைக்காரப்பபல்! என்னாலே நீங்களெல்லாம் குடிக்கிற காப்பிக்குக் கனவு காண முடியுமா?’ என்று பொய் சொல்லித் தப்பிக்கவுப் மனத்தில் ஓடியது. உடனே, பொய் சொல்லும் வாய்க்குப் போசனம் கிட்டாது!’ என்று யாரோ சொல்லக் கேட்ட விவரம் அந்தப் பொய்யை நசுக்கிவிட்டது. மெளனமாக இருந்தான்; மனத்தை ஒருநிலைப்படுத்திக்கொண்டான்; மெள்ளத் தலையை உயர்த்தினான். சிவந்த முகம் கறுத்திருந்தது. இது ஒனக்கு, இது எனக்கு' என்று சொல்லிக் கொண்டே, தம்ளரில் ஒரு பாதியை ஊற்றி அவன் குடித்தான். மறு பகுதி கொண்ட டபராவைத் தன் தங்கையிடம் கொடுத் தான் ராமன். சீதை கையிலேந்திய உபரிக் காப்பியைக் குடிக்க மன மில்லாமல், பாபுவைப் பார்த்தாள்; நீ குடி!' என்பது மாதிரி பாபுவை நோக்கிக் கண் குறிப்பைக்கொண்டு கேட்டுக் கொண்டாள், பாபுவும் கண் குறிப்பினால் 'ஊஹலம்' என்று தெரிவித்து விட்டான். - - இக்கர்ட்சியின் பாசத்தைக் கவனிக்கவில்லை, ராமன். பைஜாமாவும், முழுக்கை உலன் பனியனும் திகழ, புத்தகப் பெட்டியை எற்றிக்கொண்டே, ரேடியோவைத் திருகலானான். சீதையின் கையில் இப்போது காலித் தம்ளர் இருந்தது! ரேடியோ அவன் விரும்பிய விதமே ஜாஸ் சங்கீதத்தைப் பொழிந்திருக்கக்கூடாதா? அந்தப் பதின்மூன்று வயதுக் குழந்தைக்கு'க் கெட்ட கோபம் மூண்டது. கோபம் கெட்டது தானே? ரேடியோவை அமர்த்திவிட்டு அப்பாகிட்டே சொல்லி, என்னோட ஃபிரன்ட் நிர்மல் வச்சிருக்கிற மாதிரி ஒரு மலேயா ரேடியோ வாங்கிக்கணும். அப்பாவுக்கும் பல ஜோலி. மறந்திடு வாங்க. இன்னைக்கு தினைப்பூட்ட வேணும்' என்று முடிவு