பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் - 3 உலகமும் ஆண்டவனும்! புழக்கடையை அடைந்ததுந்தான் சமையற்கூடத் தலைவரான காசியைக் கண்டான் பாபு. பாவம், இரண்டு நிமிடங்களுக்கு அவன் என்ன பாடுபட்டு விட்டான்!- எங்கெங்கெல்லாம் தேடிவிட்டான்! யாரை?- தெரியுமல்லவா? காசியைத்தான்! என், தெரியுமோ? பாபுவுக்குச் சேர வேண்டிய மாமூலான காப்பியைப் பெறு வதற்காக வேண்டித்தான்! உரிமைப் பிரச்சினைதான்! தேவை!- அவனுக்குத் தேவை. ஒரு குவளைக் காப்பி! "அண்னே! காசி அண்னே!” என்று பாபு கூவினான். ஆனால், அச்சிறுவனின் குரலை அழுத்திவிட்டு, அப் பொழுது அங்கே பெரியவர் காசியின் குரல் மேலோங்கிக் கேட்டது. ஆமா, நம்ப மாதிரி எழையாழைங்களுக்குத்தான் விழுந்துகிட்டு இருக்குதாம். பேப்பரிலே போட்டிருக்காம்!” என்றார் அவர். அப்படிங்களா?" என்றாள் காவேரி. ஆத்தாடி!” என்றார் துளசிங்கம்.

ஊம்!” கொட்டினார் காசி.

பாபுவுக்கு ஒன்றும் விளங்கக் காணோம். தமிழ் அன்னை பங்களாவில் வேலை பார்க்கும் அத்தொழிலாளர்களை வெறித்துப்பார்த்தான் அவன்; தன்னுடைய காப்பிப் பிரச்சி னையைமறந்துவிடாமல், அவர்கள் பேசியபேச்சின்விவரத்தை அறிந்துகொள்ள ஆசைப்பட்டான். ஆமா, என்னென்னமோ பேசிக்கிட்டு இருக்கீங்களே. விஷயம் என்னவாம்? இந்தப்