பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகமும் ஆண்டவனும் 17 பொடியன் அறியலாமோ?” என்று சிரிப்பை அடக்கியவனாகக் கேட்டுவிட்டு, கள்ளிப்பெட்டியின்மீதிருந்த பொடி டப்பாவைக் காசியிடம் சமர்ப்பித்துவிட்டு நின்றான் பாபு. காசிக்குப் பொடியைக் கண்டால் ஒரு மயக்கம். பலரும் என்னதான் பயங்காட்டியும் பலனில்லை. இப்போது அதே பொடிதான் துருப்பாக உபயோகமாகிவிட்டது. . 'பாபு, விஷயம் ஒன்றும் பெரிசில்லே. நாம்ப வேலைக் காரங்க. நாம் எல்லாருமாச் ச்ேர்ந்து ஒரு லாட்டரிச் சீட்டு வாங்கினால் தேவலாம் அப்படின்னு ஒரு யோசனை பண்ணி, யிருக்கே ாம்!...” என்று விளக்கம் கொடுத்தார் காசி. பேஷான யோசனைதானுங்க. அண்ணாச்சி. பரிசுச் சீட்டை வாங்குறதினாலே, நம்ப அரசாங்கத்துக்கும் நம்ம நாட்டுக்கும் நாம் நம்மோட கடமையைச் செய்ததாக அர்த்த மாம்!-நேத்தைக்கு மண்ணடி கடைத்தெருப்பக்கம் பேசிக் கிட்டாங்க.." - . . - - "அப்படியா? அப்படின்னா, வாங்கிப்புட வேண்டியது தான். நீ என்னா சொல்றே?" நீங்க பெரியவங்க முடிவு செஞ்சால் சரிதான். நான் ...நீ ஒண்ணையும் காண வேண்டாம். உன் சவுக்குண்டான துட்டை நீ கொடுத்திட்டால் சரிதான்' - பா. பா.-2