பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தியாகம் 25 பொன்மொழிகளைப் படிச்சுக் கொடுத்த பரமசிவ வாத்தியார் கிட்டே எதுக்கும் சந்தேகம் கேட்டுக்கிடணும்!...” இவ்வாறு எண்ணமிடலானான். - - . காசி அலட்டி அழைக்கும் குரல் ஓடி வந்தது. பாபு தன்னுடைய இருப்பிடத்தைக் கடந்து காசி நின்ற திசையை நாடி ஓடினான். பின்கட்டுக்கு உரிய சுருக்கு வழி அவனுக்கு வழிவிட்டது. - “Lirų!” - அண்னே!" "உள்ளே வா, உனக்காகக் காப்பி கலந்து வச்சிருக்கேன். பலகாரம் சாப்பிடவும் ஆளைக் காணோமேன்னுதான் நானே உன்னைத் தேடிக்கிணு வந்தேன். வா, சீக்கிரமாய்!” என்றார் காசி. தந்தையின் ஸ்தானத்தில் இருந்து பேசுவதாகவே நினைத்து. அவர் உணர்ந்து பேசினார். - "அண்ணே!' - . பாபுவுக்குக் கண்கள் நிரம்பின. தந்தையின் நிலையி லிருந்து அவர் பேசியதாகவே அவனுக்கும் தோன்றியது. நடையிலிருந்த பூஞ்சிட்டுக் கடிகாரம் பத்து முறை நாகரிகமாகக் குரல் கொடுத்ததையும் அவன் கேட்கத் தவறவில்லை. அவனுக்கென்று ஏற்படுத்தப்பட்ட காலை நேரத்தின் அலுவல் களை எவ்வளவு கனகச்சிதமாக நிறைவேற்றிவிட்டான்: ராமனையும் சீதையையும் நீராடச் செய்தான் : புதிய உடுப்பு களை அவரவர் அறைகளில் கொண்டுபோய் வைத்தான். அவர்களுக்குக் காலைபலகாரமும் காப்பியும் கொடுத்தாயிற்று. பள்ளிக்கூடம் பொங்கலை ஒட்டி அடைக்கப்பட்டிருந்தது. அதனால் அவர்களைக் காரில் பள்ளிக்கு இட்டுச் செல்லும் வேலை இல்லை. பலகாரம் சாப்பிட வேண்டுமென்ற பசி, யுணர்வு அவனுக்கு இல்லாமல் இல்லை. தன்னைப்பற்றிய கதை'யை நினைத்துப் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டான் போலும் வினா தெரியும் போது, அவனுக்குத் தான் ஓர்.