பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் கடன் 35 பாபுவின் அழகான முகம் சிறுத்தது. தண்ணீர்க் குவளையை அத்தப் புதிய மனிதரிடம் நீட்டினான். அந்தப் பெரிய மனிதர் தண்ணீரை வாங்கி ஒரு மிடறு” குடித்திருப்பார்; மறுவாய் குடிப்பதற்குள். குபுக் கென்று வாந்தி எடுத்துவிட்டார். - "ஐயாவோட தலையைப் பிடிச்சுக்கடா!' ஆகட்டுங்க." "உனக்கா ஒண்னும் செய்யத் தெரியலையே! எல்லாத்தையும் சுத்தம் பண்ணுடா, பயலே' என்று உத்தரவு போட்டார் ஆனந்தரங்கம். ஆகட்டுங்க!' என்று பணிவுடன் செப்பினான் சிறுவன். உடனே, கண்மூடிக் கண் திறப்பதற்குள் எல்லாவற்றையும் சுத்தம் செய்துவிட்டு, கைகளைக் கழுவிக்கொண்டு வந்து நின்றான். ராமன் முகத்தைச் சுளித்துக்கொண்டு ஓரமாக நின்றான். வேடிக்கை மிகுந்த சிரிப்பு அவனது கறுத்த உதடுகளை அலங்காரம் செய்தது. இக்காட்சி பாபுவை என்னவோ செய்தது. கடவுளே!’ என்று உள்ளுர வருந்தியது அப்பிஞ்சு நெஞ்சு. நவகாளி யாத் திரையின் போது, காந்திஜி அந்த ஏழை முகமதியச் சிறுமி யின் முகத்தைச் சுத்தம் செய்ததாகக் கேள்விப்பட்ட நிகழ்ச்சியை அவன் நினைவுக்குக் கொண்டுவந்தான். அவன் மனம் ஒருவாறு சமாதானம் அடைய முயற்சி செய்து கொண்டிருந்தது. அவன் தன் நினைவுடன் எதிரே பார்த்த சமயத்தில் தன் முதலாளியும் அந்தச் சேட்ஜியும் ஏதோ அந்தரங்கம் பேசிக்கொண்டிருந்தார்கள். டேய் பயலே! எண்டா இப்பிடி நின்னுகினு இருக்கே? போடா. வேனும்னா கூப்பிட மாட்டேனா?” என்று கூச்ச லிட்டார் ஆனந்தரங்கம். தயங்கியபடி நகர முயன்றான் பாபு.