பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பாபுஜியின் பாபு காரை ஒரு கடன்காரனுக்குக் குடுத்து அடைச்சிட்டாராம். இன் னொரு கடன்காரன்தான் கொஞ்ச முந்தி அழகான கடிகாரத்தை வாங்கிக்கினு பறிஞ்சிட்டான். ஜவுளிக்கடைக்காகப் பட்ட கடனுக்கு இந்தப் பங்களவையே வித்து அடைக்கணும்னு ஒரு யோசனை ஐயாவுக்கு இருக்கும் போலே. பாவம், அம்மா வுக்கு மூஞ்சியிலே களையே இல்லே! பணக்காரங்க வாழ்க்கை பொய்யானது போலிருக்குது. இதுக்கு நம்ம கஷ்டம் எவ்வளவோ சிலாக்கியம் !... இந்தக் கஷ்டத்திலேதான் ஐயா நம்மளுக்குப் பொங்கல் இனாம் கொடுக்கல்லே!... என்னப்பா, நீ இப்படித் திகைச்சிட்டே?... வா, நாம நம்ம வயித்துப் பாட்டைப் பார்க்கலாம் !...' என்று விளக்கமாகக் கூறி நிறுத்தினார் காசி அண்ணன். - பாபுவின் முன் உலகம் சுழல்வது போலிருந்தது. இதற்கு முன் மாம்பலத்தில் வேலை பார்த்த இடத்தில் ஏற்பட்ட திடீர்க் கஷ்டத்தின் காரணமாக, தன்னை வேலையை விட்டு நீக்கி விட்ட சம்பவமும் மனத்திரையில் படம் காட்டியது. தஞ்சாவூரில் ஒரு டி கடையில் வேலை செய்கையில் கடை நொடித்துவிடவே, கடைக்காரன் மூதேவிப் பயலே ! நீ வந்துதாண்டா கடை விடியல்லே! என்று எசிப் பேசித் துரத்திவிட்ட நிகழ்ச்சியை அவனால் மறக்க முடியவில்லை. *நான் அதிர்ஷ்டம் கெட்ட வனா? என்று மனம் கலங்கினான்: இங்கே முதலாளி போகச் சொல்வதற்கு முன்னதாக, எங்காவது வேறிடத்துக்குப் போய்விடலாமா என்றுகூட எண்ணினான். எங்கே வேலைக்குப் போவது, எப்படி வயிறு வளர்ப்பது?-இந்தத் துயரங்கள் அவனுக்குக் கட்டை போட்டன. காசி அண்ணன், துனசிங்கம் தாத்தா, காவேரி அக்கா செய்வது போலப் பிறகு நடந்து கொள்ளலாமென்றும் முடிவு எடுத்தான். என்னோட கஷ்டம் இருக்கட்டும். ஆனா, பாவம் முதலாளி தாய் மாதிரி உள்ள அந்த அம்மாளோட கஷ்டம் விடிஞ்சால் தேவலாம். அதுக்கு வழி?... கடவுளுக்குத்தான் தெரியும். நான் என்னத்தைக் கண்டேன்?. சின்னப்பிள்ளை ... என்று நினைத்தான் பாபு.