பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியக் கவசம் 4} காசி உறிஞ்சிய பொடி எவ்வளவு நாழிகைக்குத்தான் தாக்கு’ப் பிடிக்கும்? - வாப்பா சாப்பிட "நீங்க சாப்பிடுங்க. எனக்குப் பசிக்கல்லே!" பைத்தியக்காரப் பிள்ளையப்பா நீ. முதலாளியோட கதை உன்னோட பசியை அடைச்சுருச்சு போலே!... இவ்வளவு நல்ல மனசு கொண்ட ஒனக்கு மந்திரம் மாயத்திலே ஒரு லட்சம் பணம் கிடைச்சாலும் பரவாயில்லே, ஐயாவோட கஷ்டமெல்லாம் விடிஞ்சிடும். வெறும் கதை பேசி என்ன புண்ணியம்?...சரி, நான் போறேன். பசி வயித்தைக் கிள்ளுது !...” என்று சொல்லிவிட்டு, நடைக்குள் நடையைக் கட்டினார் சமையற் கலைஞர் காசி. - பங்களாவின் பயங்கர அமைதி பாபுவை என்னவோ செய்தது. - 淤 #: 米 மண்ணடிக் கடைத்தெரு. சுட்டுப் பொசுக்கும் வெயில். சுடாமல் பொசுக்கிய பசி. பாபு அங்கும் இங்குமாக அலைந்தான் : திரிந்தான். கீழ் முனையில் இருந்தது ஒரு பிள்ளையார் கோவில். அதன் வாசலில் போய்க் குந்தினான். சின்னப்பிள்ளை, அவனுக்குத் தன்னைப்பற்றிய சிந்தனை இல்லை; தன் எஜமானரைப் பற்றின கவலைதான் மிஞ்சியிருந்தது. முதலாளி ஐயாவோட கடன் சுமை தீர்ந்து போயிடச் செய், அப்பனே !! என்று மன மாரப் பிரார்த்தித்துக்கொண்டான். அவ்விடத்தில் மேலும் உட் கார இருப்புக்கொள்ளவில்லை. எழுந்தான்; நின்றான்; நின்ற வாக்கில், கண்களை மூடிக்கொண்டான். ஓர் அழகான கனவு தோன்றியது !... 'ஆஹா என்று மெய்ம்மறந்து தன்னுள்தனக்குத்தானே சொல்லிக்கொண்டே கண்களை மலரத் திறந்தான்; எதிர்க்கடையில் யாரோ ஒரு வாண்டு பரிசுச்