பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 பாபுஜியின் பாபு அப்போது, எங்க சீட்டுக்குப் பரிசு பெருந்தொகையா விழுந்தாக்க, தெருப்பிள்ளையாரப்பனுக்கு ஒரு தேங்காய் சிதறுகாய் விடறதாய் நாங்க மூணு பேரும் நேந்துகிட் டிருக்கோம்!” என்று காசி அண்ணன் சொன்ன தாக்கல் அவனுக்குச் சிகிப்பை வரவழைத்தது. அப்பொழுது பாபுவின் மனத்தில் ஒரு ரூபாய் ஒரு பிரச்சினையாக இருந்தது. ஒரு ரூபாய் எப்படிக் கிடைக்கும், எப்படிச் சம்பாதிப்பது? என்று வெகுதுரம் மூளையைப் போட்டுக் குழப்பிக்கொண்டான்; தன் எஜமானி அம்மாள் அன்புடன் - ஆதரவுடன் - பாசத்துடன் உணவு பரிமாறிய அக்காட்சியை அவன் உயிருள்ளமட்டும் மறக்கவே மாட்டான்! என் கடமையை அவங்களுக்கு என் ஆயுளில் செஞ்சாகணும். அப்பத்தான் எனக்கு நிம்மதி கிடைக்கும்! என்றும் தீர்மானம் செய்துகொண்டான். - ஒரு சமயம். இதே மண்ணடி வீதியில் செட்டிமார் விடுதியி லிருந்து கப்பலடிக்குச் சாமான் சுமந்து சென்று சுமையாக ஒரு ரூபாய் சம்பாதித்த சம்பவம் மின்னல் காட்டியது. உடனே, கடவுளை எண்ணித் தொழுதான். கையிலிருந்த காப்பித்துள் பொட்டணம், அவன் நினைவில் இல்லாமற்போயிற்று. நடந்தான். என்ன அதிசயம்! விடுதியின் வாசலில் நின்ற செட்டியார் ஒருவர். தம்பி, துறைமுகம்வரை இந்தப் பெட்டியைத் தூக்கிக்கினு வாரீயப்பா? கேட்கிற பணம் தாரேன்! சோதனை போல ஒரு ரிக்ஷாவைக்கூடக் காணோம்!” என்றார். - பாபு மாட்டேன் என்பானா? • •ష్ట్ర!' . . . சரி, தூக்கு' பெட்டி என்ன கனம்! பாபு மூச்சைப் பிடித்துக்கொண்டு. பெட்டியைத் தலையில் சுமந்தபடி நடந்தான். மூச்சு முட்டியது. கெட்டியாகப் பற்றிக்