பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர் 51 அடைஞ்சிடும்; இந்தப் பங்களாவும் மிஞ்சிவிடும். ஏக்கம் கொண்டது அக்குழந்தை உள்ளம். என்னவோ தோன்றியது; வேகமாகத் தோட்டத்தை அடைந்தான் பாபு; முன்னால் தெரிந்த பங்களாவை மேலும் கீழும் பார்த்தான். இத்தனை பெரிய பங்களாவைக் கடனுக்கு அடைச்சிட்டு, ஐயாவும் அம்மாவும் வேறே ஊருக்குப் போப் வாடகை வீட்டிலே இருக்கிறதா?... எப்படி அவங்க மனசு தாளும்?... என்று துயரமடைந்தான் அநாதைச் சிறுவன். - - - - ராமனும் சீதையும் பஸ்ஸில் பள்ளிக்குச் சென்றிருக்கி றார்கள்; ஐந்து மணிக்குத் திரும்புவார்கள். அவர்களாகவே பஸ் எறி, அவர்களாகவே பஸ்ஸிலிருந்து இறங்கி வந்து சேருவார்கள்; பழகிவிட்டார்கள். - . மணி இப்போது என்ன? սու பழைய - ஞாபகத்தில் நடைக்கு வந்தான். ஆசையோடு பூஞ்சிட்டுக் கடிகாரத்தைத் தேடினான்; அதைக் காணாமல், மீண்டும் எங்கினான். ~ மணி அஞ்சாயிடுச்சு. பசங்க வர நேரமாச்சு!" என்று முதலாளி தன் மனைவியிடம் சொல்லிக்கொண்டிருக்கையில், பாபு எட்டிப் பார்த்தான்: "நான் பஸ் ஸ்டாப்புக்குப் போய் அழைச்சுக்கிட்டு வரட்டுங்களா?" என்று மரியாதையுடன் கேட்ட்ர்ன். . . . . . . வேண்டாப்பா. நீ இரு வேலை இல்லைன்னா, தோட்டத்தைப் பார்த்துக்க கி ழ வ ன் பகலிலேகூடத் தூங்குவான்!” என்று சொல்லிவிட்டுக் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். இன்னும் கொஞ்ச நேரத்திலே சீட்டுக்குலுக்கலின் முடிவு தெரிஞ்சிடும். ரேடியோவிலே சொல்லிடுவாங்க. எதுக்கும் நம்ப சீட்டுகள் எல்லாத்தையும் எ டுத்து வைச்சுக்க, அபயம்!" என்றார் ஆனந்தரங்கம் அவர்கள். -- அபயாம்பாள் தலையை ஆட்டினாள்.