பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர் 53 காசி அண்ணன் வந்து நின்றார். அவரது உள்ளங்கையில் நெல்லிக்கனி இல்லை. அதற்குப் பதிலாகப் பரிசுச் சீட்டு இருந்தது. மாடியில் ரேடியோ அலறியது. பரிசு விழுந்த சீட்டுகளின் எண்கள் படிக்கப்பட்டன. காசியோடு பாபுவும் தொடர்ந்தான். * காசியின் சீட்டுக்குப் பரிசு இல்லை. ஆயிரம், நூறு இருந்தால்தான் உண்டு! - ஆனந்தரங்கத்தின் அத்தனை சீட்டுகளும் பயன் தர வில்லை! சில்லறைத் தொகை வந்து உப்புக்கு ஆகப் போகிறதா. புளிக்கு ஆகப் போகிறதா ? - 案 ※ 翡 'பலே, பாண்டியா !” என்றால், அப்பட்டம் பாபுவுக்கு மிகவும் பொருந்தும், பாபு இப்போது கடைவீதியில் நின்றான். யாரோ ஒரு புண்ணியவான் வாங்கியிருந்த மாலைப் பதிப்பில் லாகவமாகப் பார்வையைப் பதித்தான். அவனது பிஞ்சு நெஞ்சு அடித்துக் கொண்டது. அவன் நினைவு ஆண்டவனைச் சரணடைந் திருந்தது. அவனது இதயத்தில் பாபுஜி வீற்றிருந்தார். வரிசையாகப் பார்வையிட்டுக்கொண்டே வந்தான். அவன் வாங்கியிருந்த சீட்டின் இலக்கங்களை மனப்பாடம் செய்து வைத்திருந்தான்; ஆகவே, பதற்றத்துடன் பரிசு பெற்ற எண்களைக் கவனித்தான், ஏமாற்றம் ஏற்பட்டது. பத்திரிகை யின் பின்புறத்தைப் புரட்டியதும், அவன் மனம் மீண்டும் எம்பியது : தணிந்தது. மறுகணம், அவன் ஆ! என்று தன்னையும் மறந்து அலறிவிட்டான். கூட்டத்திலிருந்த மக்கள் அவனைச் சூழத் தொடங்கியதையும் சட்டை பண்ணவில்லை; சட்டைப்பையிலிருந்த துண்டுக் காகிதத்தை வெளியில் எடுத் தான்; அவன் பார்த்த எண்களுடன் சரி பார்த்தான்; பகவானே!... பாபுஜி " என்று கூவியவனாக அவ்விடத்தை விட்டகன்றான். . -