பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர் மாட்டிங்களே ! உலகம் ரொம்பப் பெரிசு அப்படின்னு சொல்றாங்க! அப்படிப்பட்ட பெரிய உலகத்திலே இந்த அநாதைக்கு ஓர் இடம் கிடைக்காமலா போயிடும்! மகாத்மா காந்தியின் பொன்மொழிகளை யும் தாங்கள் என்மீது காட்டிய இரக்கத் தையும் வாழ்வில் மறக்க மாட்டேன் ! பாபுவை மறந்துப்பிட மாட்டீங்களே! என்னைத் தேடிப் பயனில்லை ! நான் போய் வருறேன் !ஆமா - போயிட்டு வருறேன் ! இப்படிக்கு, ஏழை அநாதையான

  • பாபு.’

தமிழ் அன்னை பெருமனையின் தலைவரும் தலைவியும் மாலை மாலையாகக் கண்ணிர் பெருக்கிக் கொண்டிருந்தார்கள். பாபு ! நீ தெய்வப் பிள்ளையடா!... முருகன்தான் உன் ரூபத்திலே, வந்து விளையாடியிருக்கான் !... முருகா!... எங்க பாபுவை மறுபடியும் எங்ககிட்டே கொண்டாந்து சேர்த்துப்பிடு. தெய்வமே!... பாபு!" என்று புலம்பினாள் அபயாம்பாள். நீலப் பாதரச ஒளியிலே. அந்தப் பரிசுச்சீட்டு தெய்வமாகச் சிரித்துக்கொண்டேயிருந்தது : ... 57"