பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பு கேட்காது, கொடுக்கும்! 3. காசி தொண்டையைக் கனைத்துக்கொண்டார். கச்சேரி செய்யவா? இல்லை, இல்லை! - சிறுவனை "இரு முறை அழைத்த அலுப்பைச் சரிசெய்துகொள்ளத்தான்! என்ன செய்கிறது. இப்போ? என்று யோசனை செய்ய வேண்டியவர் ஆனார் காசி. - என்ன, நீங்களும் யோசனை செய்யத் தொடங்கிவிட்டிர் களே! சமையற்காரரை சர் விகுதி போட்டுச் சொல்கிறேனே. என்றா? ஆம்; அதுவேதான் தமிழ்ப்பண்பாடு. பெரிய மனிதர் காசி. வயதுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் அல்லவா? காசிக்கு யோசனை வந்துவிட்டது. சற்றுமுன் தயாரித்த "தஞ்சாவூர் டிக்ரி காபியில் ஒரு வாய்க்கு இரண்டு வாயாக அருந்தி வைத்த அவருக்கு யோசனை வராமல் இருக்குமா, என்ன? அப்படி வராமல் இருந்தால், அப்புறம் அவர் போட்ட காப்பிக்குத்தான் மரியாதை எது? காசி, நீ காப்பி போடுற லட்சணத்துக்காகத்தான் உன்னை இந்தப் பத்து வருஷமாய் நம்ப பங்களாவிலே வேலைக்கு வச்சிக்கினு இருக்கேனாக் கும்!” என்று அவர் முதலாளி-அதாவது, காசி பணி புரியும் இந்தத் தமிழ் அன்னை இல்லத்தின் தலைவரான உயர்திரு வாளர் ஆனந்தரங்கம் அவர்களே-சான்று கொடுத்துவிட்டா ரென்றால், அப்புறம் காசியின் திறமைக்குக் கேட்கவே வேண் டியதில்லைதான்! மாடிப்படிக்கட்டின் ஒரமாக இருந்த உயர்ந்த முக்காலியை வலக்காலால் இழுத்துப்போட்டு, தம் கையிலிருந்த தட்டைப் பதனமாக அதில் வைத்தார் காசி. மார்கழி மாதத்தின் குளிர் இப்போதுதான் அவருக்கு உறைக்க ஆரம்பித்தது. புதுக் கருக்கு மின்ன, பளிங்குச் சுவரில் மின்னிய அந்தப் - புதிய காலண்டரையும், அதில் இருந்த கள்ளங்கவடு அறியாத சிறுவனையும், அவனுக்கு மேலே பளிச்சிட்ட 1939 என்ற் இலக்கத்தையும் பார்த்துவிட்டு, அதே,சடுதியில், பாபுவை யும் உற்று நோக்கினார் சமையல் கலைஞர். பாவம்' என்று அவரது உதடுகள் முணுமுணுத்தன. மறு கணம். அவர் நெஞ்சில் கடிகாரத்தின் இதயத்துடிப்பு எதிரொலித்தது. உடனே, பாபுவை அண்டினர்; அவனுடைய இடத்தோள்