பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

15

பார்சி பாடங்களை நடத்த வருவார். இவ்வாறு பார்சி பாடங்களை எல்ல்ாம் மெளலவியே கற்றுக் கொடுத்து விடுவார்.

கற்றுக் கொடுத்தப் பாடங்களை எல்லாம் மாணவர்கள் மனனம் செய்ய வேண்டும்; ஒப்பிக்க வேண்டும்; இது பிள்ளைகளுக்குத் துன்பம் என்பதால், ஆசானை எவ்வாறு ஏமாற்றலாம் என்பதற்கான சூழ்ச்சிகளை அவரவர் அறிவுக்கேற்றவாறு செய்து கொண்டே இருப்பார்கள்.

இளமைப் பருவம் முழுவதும் இராஜேந்திரர் தனது சொந்தக் கிராமத்திலேயே பெற்றோர்களுடன் இருந்தார். அந்தக் கிராம மக்களது சூழ்நிலைதான், அவரது வாலிபம், வயோதிகம், பதவிக்காலம் எல்லாவற்றிலும் எளிமையினையே கடைப்பிடிக்கும் வழக்கமானது.

கிராமங்கள் பெரும்பாலும் எந்தப் பொருட்களையும் வெளியே இருந்து வாங்குவதில்லை. ஆனால், கிராமப் புற பேரூர்களில் வாரத்துக்கு ஒருமுறை சந்தை கூடும். கிராமத்திலே உள்ள குழந்தைகளுக்கு அன்று ஒரே ஆரவார மகிழ்ச்சிதான். இதுபோலவே, ராஜேந்திரர் கிராமத்திலும் திருவிழா போல ஒரு நாள் சந்தை கூடுவதுண்டு. அங்கே ஏராளமான பொம்மைகள், விளையாட்டுப் பொருள்கள், சந்தை விற்பனைக்காக வரும். அதற்குப் பிறகும் சிறுவர்களது உற்சாகத்துக்குச் சொல்ல வேண்டுமா? ஒரே ஆரவாரக் கொண்டாட்டம் தானே!

கோயில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்ற தமிழ்நாட்டுப் பழமொழிபோல, வடநாட்டுக் கிராமங்களிலும் பல சிறு சிறு கோயில்கள் உண்டு. அங்கு காலை,மாலை நேரங்களில் பூசைகள் நடக்கும்; மணி ஒலிக்கும்; சங்கு ஊதுவார்கள். ராம நவமி, ஜன்மாஷ்டமி காலங்களில் கோயில்களில் சிறப்பு அலங்காரங்கள் செய்து திருவிழா கொண்டாடுவார்கள். ராஜேந்திரர் மற்றக் குழந்தைகளோடு சேர்ந்து இந்த அலங்கார வேலைகளைச்