பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

31

விடுவதா? என்று எண்ணியபடியே தாரை தாரையாக அவரது கண்களிலே இருந்து கண்ணீர் பெருகி வழிந்தது.

இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக, தம்பி ராஜேந்திரர் அண்ணன் இருக்கும் பக்கம் வந்தார். அப்போது தனது தமையன் கண்களிலே இருந்து கண்ணீர் வழிவதைக் கண்டு மனம் தளர்ந்து போனார்.

தம்பியைப் பார்த்த மகேந்திர தேசாய், உணர்ச்சி தாளமுடியாமல், கவலையும் ஆத்திரமும் பொங்கியபடியே ‘தம்பி’ என்று கதறிக் கதறி அழத் தொடங்கினார். அண்ணன் தேம்பித் தேம்பி அழுவதைக் கண்ட ராஜேந்திரரும் உணர்ச்சி வயப்பட்டு, அண்ணனைக் கட்டித் தழுவிக் கொண்டு ‘கோ’வெனத் தன்னையுமறியாமல் அழுதுவிட்டார். இருவரும் மனம் உருகினார்கள். இருவருக்கும் பேச ‘நா’ எழவில்லை. உடனே விர்ரென்று ராஜேந்திரர் அவசரம் அவசரமாக வெளியேறிவிட்டார்.

தம்பி சென்ற வேகத்தைக் கண்டு மகேந்திர தேசாய் மீண்டும் வேதனைப்பட்டார். குடும்பச்சுமையைத் தாளாமல் அவர் துவண்டு கொண்டிருந்தார். அவரது வருவாய்க்கு மீறிய செலவு, பெற்ற தாயாருக்கோ உடல் நலம் சரியில்லை, அதற்கும் பணச் செலவு அதிகமாகின்றது. இவற்றை எல்லாம் எண்ணி தனியே இருந்த அவர் தள்ளாடி விழுந்து விட்டார். அப்போது ராஜேந்திரரின் மனைவி தனது கணவன் வந்தாரா என்று அறிய வந்தார்.

மகேந்திர தேசாய் மயக்கமடைந்து வீழ்ந்து கிடந்ததைப் பார்த்த அவர், அவரைத் துக்கி குடிக்கத் தண்ணீர் தந்து ஆசுவாசப் படுத்தி இளைப்பாற வைத்து, என்ன நடந்தது என்று கேட்டார்.

மீண்டும் மகேந்திர தேசாய் அழுத முகத்தோடு, தம்பி நம்மையெல்லாம் விட்டு விட்டு பூனா சென்று இந்தியர் ஊழியர் சங்கத்தில் 25 ரூபாய் சம்பளத்துக்காகச் சேரப் போகிறானாம். வக்கீல் வேலைக்கு பாபு சென்றால் நமது குடும்பம் உயர்நிலை