பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

பாபு இராஜேந்திர பிரசாத்

அடையும் என்று நம்பினேன். தம்பி இராஜேந்திரன் எம்.ஏ.படித்துக் கொண்டிருந்த போது அப்பா காலமானார். அதற்குப் பின் தம்பியைச் சட்டப் படிப்பு படிக்க வைத்தேன். மூன்று தங்கைகளுக்கும் தக்க இடத்தில் திருமணங்களைச் செய்தேன். இவையெல்லாம் செலவினங்கள் என்றாலும் வரவு ஏதம்மா? வழக்கம்போல்தானே இப்போது அம்மாவுக்கும் உடல் சரியில்லை. இந்த நேரத்தில் தம்பி குறைந்த சம்பளத்திற்காக, நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்து போகிறேன் என்கிறானே அந்த மனவேதனையை என்னால் தாங்க முடியவில்லை என்று மீண்டும் அழ ஆரம்பித்துவிட்டார்.

மகேந்திரர் நிலையைக் கண்டு ராஜன் பாபு மனைவியாருக்கும் கண்ணீச் சுரந்துவிட்டது. மன ஆறுதலுடன் மகேந்திரரை அமைதிப்படுத்தி விட்டு வீட்டுக்குச் சென்றார்.

இந்த நிலையில் ஒருவாரத்துக்குள்ளாகவே, மீண்டுமோர் கடிதம் ராஜன் பாபுவிடம் இருந்து வந்தது.

அன்புள்ள அண்ணா!

எதிர்பாராமல், தங்களை எனது கடிதத்திற்குப் பிறகு பார்த்தபோது, நான் மிகவும் திகைத்து விட்டேன். என் மீது எவ்வளவு பெரிய விசுவாசமும், பாசமும், அன்பும் இருந்திருந்தால் என்னைப் பார்த்துத் தேம்பித் தேம்பிக் கட்டி அழுவீர்கள் என்பதைப் பிறகுதான் சிந்தித்தேன்.

தங்களது எண்ணம் என்ன என்பதை எனது மனைவியும் என்னிடம் கண்ணீர் சிந்தியவாறே கூறினாள். தங்களுடைய கருத்தைப் புரிந்து கொண்டேன். ஆனால், என்ன கூறுவது என்றுதான் புரியவில்லை. எவருக்கும், எப்போதும் மனம் நோகத் துன்பம் தரக் கூடாது என்பதே எனது கருத்து. எனவே,தந்தைக்குத் தந்தையாக என்னை ஆதரித்துக் காத்த தங்களுக்கோ, நம் அன்புள்ள