பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

41

தொழிலைத் தொடர்ந்தார். அங்கேயும் அவருக்கு தொழில் விரைவாகவும், வளமாகவும் நடந்து வந்தது. கல்கத்தா வழக்கறிஞர் என்ற பெயர் இங்கேயும் அவருக்கு தொடர்ந்து வந்து நிலைத்தது. இவ்வளவு பெரிய பெயரும் புகழும் செல்வாக்கும் மக்கள் இடையே வளர்ந்தோங்கியதற்குப் பிறகும் கூட, ராஜேந்திரர் எளிய ஒரு குடியானவனைப் போலவே வாழ்க்கையை நடத்தினார். பாபுவின் சட்டப் புலமையை மதித்து ஆங்கிலேயர் அரசு அவரை உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக நியமிக்க பரிசீலனை செய்து வந்தது.

வழக்குரைஞர் பணி ஒன்று மட்டுமே நமது பிறப்புரிமைக்குப் போதுமானது, உகந்தது என்று அவர் கருதாமல், ஓய்வு எப்போதெல்லாம் கிடைக்கின்றதோ அப்போதெல்லாம், பொது நலப் பணிகள் ஏதாவது ஒன்றில் ஈடுபாடு கொண்டே இருந்தார். இதற்கு எடுத்துக்காட்டாக ஒன்றைக் கூறலாம்.

பாட்னாவில் ஒரு பல்கலைக் கழகத்தை ஏற்படுத்திட தில்லி சட்டமன்றத்தில் ஆங்கிலேயர் ஆட்சியினர, ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்திலே பல குறைபாடுகளும் - குழப்பங்களும் இருந்தன. பீகார் மக்கள் இக்காரணத்தால் அந்தச் சட்டத்தை இழிவாய்க் கருதினார்கள்.

மக்கள் நினைத்த குறைபாடுகளை, ராஜன் பாபு பத்திரிக்கைகளுக்கு விளக்கிக் கட்டுரைகள் எழுதினார். பல பொதுக் கூட்டங்களை நடத்தி தானறிந்த அக்குறைபாடுகளை விளக்கி மக்கள் இடையே பேசினார். அந்தச் சட்டத்தை எதிர்த்து பீகார் மக்களும் கிளர்ச்சி செய்யலானார்கள்.

பொது மக்களது கிளர்ச்சியின் பயனாக, பிரிட்டிஷ் அரசு பல்கலைக் கழகத்தின் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்தது. அதேநேரத்தில் ராஜன்பாபுவும் பல்கலைக்கழக நிர்வாகக் குழுவில் ஓர் உறுப்பினரானார் ஏழை மக்களால் பல்கலைக் கழகப் பட்டப் படிப்பை பெற முடியாத அளவுக்கு சம்பளம், மற்ற செலவினங்கள்