பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



7. காந்தியடிகள் கைது

பீஹார் மாகாணத்தில் சம்பரான் என்றொரு மாவட்டம் உள்ளது. அங்கே சண்பக மரங்கள் காடுகளைப் போல பெருகி அடர்ந்து பரந்து விரிந்து வளர்ந்திருந்ததால், அப்பகுதிக்கு சண்பகாரண்யம் என்ற பெயர் வந்தது. இந்த சண்பகாரண்யம் என்ற சொல் நாளடைவில் பேச்சு வழக்கில் மருவி சம்பரான் என்றாயிற்று. அது சரித்திரப் புகழ் பெற்ற ஒரு பழமையான மாகாணம்.

அண்ணல் காந்தியடிகள் இதுபற்றி தனது சுயசரிதையான “சத்திய சோதனை” என்ற புத்தகத்தில் எழுதியுள்ள விவரம் வருமாறு:

“ஜனகமகாராஜன் ஆண்ட நாடு சம்பாரன். அங்கே மாந்தோப்புகள் ஏராளமாக இருப்பதைப் போலவே, 1917 ஆம் ஆண்டு வரையில், அவுரித் தோட்டங்களும் நிறைய இருந்து வந்தன. சம்பாரன் குடியானவர் ஒவ்வொருவரும், தாம் சாகுபடி செய்யும் நிலத்தின் இருபதில் மூன்று பாகத்தில் தமது நிலச்சுவான்தாரருக்காக அவுரியைக் கட்டாயம் பயிர் செய்தாக வேண்டும் என்று சட்டம் இருந்தது. இதற்கு கதியாக்கள் கதியா முறை என்று பெயர். அதில் மூன்று ‘கதியா’வில் அவுரிச் சாகுபடி செய்ய வேண்டும் என்று சட்டம் இருந்ததால் அம்முறைக்குத் ‘தீன் கதியா’ என்று பெயர். இந்த சம்பரானில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பெருந்துன்பங்களை அனுபவித்து அவுரியைப் பயிரிடுகிறார்கள். ஆயிரக்கணக்கான அந்த விவசாயிகள் அனுபவித்து வரும்