பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

பாபு இராஜேந்திர பிரசாத்

இறுதியில், “ஆண்ட்ரூஸ் பிஜித் தீவுக்கு போவது நல்லது” என்று காந்தியடிகளும் மற்றவர்களும் தீர்மானம் செய்தார்கள்.

காந்தியடிகளுடன் சுயராச்சியம் பற்றி அடிக்கடி பேசினோம். ‘உங்களுக்கு சுயராச்சியம் என்றால் என்ன என்று தெரியவில்லையா? நான் அதற்கான பணிகளைத் தானே செய்கிறேன்’ என்றார். நாங்கள் அவருடைய சொற்களில் இருந்த பொருட்செறிவைப் புரிந்து கொள்ளவில்லை.

அவுரி விவசாயிகள் விசாரணைக் குழுவின் விசாரணை நீண்ட நாட்களாகத் தொடர்ந்து வந்ததைக் கண்ட லெப்டினெட் கவர்னர் சர் எட்வர்டு கெயிட் தம்மை வந்து பார்க்குமாறு காந்தியடிகளுக்குக் கடிதம் எழுதினார்.

காந்தியடிகள் நேரில் சென்று அந்தக் கவர்னரைப் பார்த்தபோது, “விவசாயிகளின் கோரிக்கைகள் நியாயமானவை, அவர்களிடமிருந்து வெள்ளைக்காரக் குத்தகைதாரர்கள் பணம் பறித்து வந்தது சட்ட விரோதமானது என்றார். அவர்கள் வசூலித்த பணத்தின் ஒரு பகுதியைத் தோட்ட முதலாளிகள் விவசாயிகளுக்குத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று விசாரணைக்குழு அறிக்கை தந்துள்ளது உறுப்பினராக உள்ள உங்களுக்கும் தெரிந்த ஒன்றுதானே! எனவே, சட்டத்தின் மூலம் விவசாயிகளின் ‘தீன்கதியா’ முறையை ரத்துச் செய்து உத்திரவிட்டிருக்கிறேன்” என்றார்.

எந்தக் குறிக்கோளுக்காக காந்தியடிகளும் ராஜேந்திர பிரசாத்தும் அரும்பாடுபட்டு உழைத்தார்களோ, அந்த லட்சியம் விவசாயிகளது தீன்கதியா ஒழிப்புச் சட்டம் நிறைவேறியது. தோட்ட முதலாளிகளின் பலம் அளவற்றது. விசாரணைக் குழு அறிக்கையையும் பொருட்படுத்தாமல் மசோதாவை வைராக்கியமாக எதிர்த்து வந்த போதும் கூட, லெட்டினன்ட் கவர்னர் சர்எட்வர்டு கெயிட் தனது சாமர்த்தியம் முழுவதையும் பயன்படுத்தி, காந்தியடிகளது போராட்டத்திற்கும், ராஜன்பாபு