பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

பாபு இராஜேந்திர பிரசாத்

விவசாயிகள் தங்களது குழந்தைகளை, அவர்களது விருப்பம்போல கண்டபடி அலைய விட்டு வந்ததையும், காலையிலே இருந்து இரவு வரையில் நாளொன்றுக்கு இரண்டு செப்புக் காசுக்காக அவுரித் தோட்டங்களில்மாடு போல உழைத்து வந்த போக்கையும் தடுத்து நிறுத்திட விவசாயப் பெற்றோர் சங்கத்தை உருவாக்கி அவர்களைத் திருத்தி வந்தார்.

அந்த நாட்களில் மூத்த ஓர் ஆண் விவசாயிக்கு இரண்டனாவுக்கு மேல் கூலி இல்லை. எந்த ஒரு விவசாயி அல்லது தொழிலாளி, நான்கணா சம்பாத்யத்தை செய்து விடுவானேயானால், அவன்தான் அதிர்ஷ்டக்காரன்.

காந்தியடிகள் திட்டமிட்டிருந்தபடி அவரை அழைத்து வந்து ஆறு கிராமங்களில் ஆரம்பப் பள்ளிகளை ராஜன்பாபு துவக்கி வைத்தார். அப்போது அதற்கான ஆரம்ப ஆசிரியர்கள் அங்கே கிடைப்பது அருமையாக இருந்தது. ஊர்ப் பெரிய மனிதர்களை ராஜன் பாபு சந்தித்து, பள்ளி ஆசான்கள் தங்க இடமும், உணவுத் தானியங்களும் தந்தால்போதுமானது என்று ஒப்புதல் பெற்றார்.

காந்தியடிகளது கருத்துப்படி, பள்ளி ஆசான்கள் பாடங்களைப் போதிப்பதை விட, ஒழுக்கத்தில் உறுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கேற்றவாறு அவர்களது இலக்கிய ஞானத்தை விட குழந்தைகளுக்குக் கற்பிக்கும் ஒழுக்கம் ஓம்பும் ஞானத்துக்கான ஆசிரியர்களை ராஜன் பாபு தேடியும் கிடைக்கவில்லை. அதனால், காந்தியடிகளது சம்மதத்தின் பேரில் பத்திரிகையில் பொதுக் கோரிக்கை என்ற பெயரில் ஓர் அறிக்கை விடுத்தார்.

அந்த அறிக்கையைக் கண்டவர்களில் சிலர், “அன்னயாவினும் புண்ணியம் கோடி; ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்ற பாரதி வாக்குக்கேற்றவாறு, பாபா சாகிப் சோமன், புண்டலீகர் என்ற இருவரை கங்காராவ் தேஷ் பாண்டே என்ற காந்தியடிகளது நண்பர் அழைத்துக் கொண்டு ராஜன்பாபுவிடம் வந்தார். பம்பாயிலே