பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

59

தொழிலிலே பணியாற்றுபவர்கள் ஒன்று கூடி கண்டன ஊர்வலங்களை நடத்தினார்கள், இதனால், பிரிட்டிஷபு அரசு ஆத்திரம் கொண்டது. தொண்டர்களைக் கொடுமை செய்ய முற்பட்டது.

காங்கிரஸ் அறப்போர் தொண்டர்களைச் சேர்க்க அரும்பாடுபட்டது. ஆயிரக்கணக்கானவர்கள் ராஜன் பாபுவின் பொது வாழ்க்கை நாணயத்தை நம்பி தொண்டர்களாகப் பதிவு செய்து கொண்டார்கள். ஜவகர்லால் நேருவின் தந்தையாரான பண்டித மோதிலால் நேரு போன்ற எண்ணற்றோர், தங்களைத் தொண்டர்களாகப் பதிவு செய்து கொண்டார்கள். அரசு அவர்களைக் காராக்கிரகத்தில் அடைத்துக் கொடுமைகளைச் செய்தது. ஆனால், ராஜன் பாபுவை மட்டும் கைது செய்திட பீகார் அரசுக்கு துணிவு வரவில்லை.

ஏராளமான காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் வெள்ளையராட்சியால் கைது செய்யப்பட்டு விட்டதல், காங்கிரஸ் போராட்ட இயக்கம் பலவீனமானது. மக்களும் சோர்வடைந்து விட்டார்கள். மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ் போன்றவர்கள், சட்டமன்றங்களிலே கலந்து கொண்டு, பிரிட்டிஷார் கொடுமைகளை எதிர்த்துப் போராடிட முடிவு செய்தார்கள். இவர்கள் கருத்து மகாத்மா காந்தி கருத்துக்கு முரணானது.

இராஜேந்திர பிரசாத், ராஜாஜி போன்றவர்களை ‘மாறுதல் வேண்டாதவர்கள்’ என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் முழுக்க முழுக்க காந்தியடிகளது கருத்தையே பின்பற்றினார்கள். இவர்கள் காங்கிரஸ் கட்சியினுடைய நிர்மாண வேலைகளை மட்டுமே செய்தார்களே ஒழிய சட்டமன்றப் போராட்டங்களைச் செய்யவில்லை.

காங்கிரஸ் தொண்டர்கள் கதர் நூல்களைத் தயாரிப்பதும், கதராடைகளை உருவாக்குவதும் அதற்கான பயன்பாடுகளை