பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

பாபு இராஜேந்திர பிரசாத்

மக்களிடம் விளக்கிக் கூறி பொருளாதாரத்தைப் பெருக்கும், கதர் பிரச்சாரத்தையும் செய்தார்கள். ராஜேந்திர பிரசாத் இந்தப் பணியை தொண்டர்கள் இடையே தீவிரப்படுத்தினார். பாபுவும் இறுதிவரை ஒவ்வொரு நாளும் நூல் நூற்று வந்தார். இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றப் பிறகும் கூட, கதர் பணிகளைச் செய்யும் பழக்கத்தை அவர் கைவிடவில்லை.

இதே பணிகளை சுமார் எட்டு ஆண்டுகள் ராஜன் பாபு தொடர்ந்து செய்து வந்தார். அதைக் காங்கிரஸ் கட்சியினுடைய வளர்ச்சிப் பணிகளிலே ஒன்றென எண்ணிச் செய்தார். 1928-ஆம் ஆண்டில் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் போராட்டச் சங்கு முழங்கியது.

பிரிட்டிஷ் அரசு நியமித்த சைமன் கமிஷனை காங்கிரசும் நாடும் பகிஷ்காரம் செய்தது. 1930 ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேரு தலைமையில் லாகூரில் காங்கிரஸ் மாநாடு கூடியது. இந்த மாநாட்டில் தான் இந்திய நாட்டுக்கு முழு சுதந்திரம் தேவையென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காந்தியடிகள் 1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து உப்புச் சத்தியாக்கிரகப் போரை ஆரம்பித்தார். ராஜேந்திர பிரசாத் இந்தப் போராட்டத்தில் தீவிரமாய் கலந்து கொண்டார். 1930- ஆம் ஆண்டில் ஜூலை மாதம் அவர் கைது செய்யப்பட்டு, ஆறு மாதம் சிறைத் தண்டனைப் பெற்றார்.

அதற்குப் பிறகு, 1932 ஆம் ஆண்டில் ராஜன் பாபு மீண்டும் கைது செய்யப்பட்டு, மறுபடியும் ஆறுமாதம் தண்டனையை அடைந்தார். இத்தகையவர், இரண்டு முறை ஆறாறு மாதம் அடுத்தடுத்துச் சிறை சென்றதால், அவர் காசநோய்வாய் பட்டார். பிறகு, நாளாவட்டத்தில் அந்த நோய் வெளிப்படையாகவே அவரை துன்புறுத்தியது. சிறை அதிகாரிகள் அவருக்கு