பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

67


பாரிஸ் மாநாடு முடிந்த பின்பு, ரோமன் ரோலந்து அறிஞரிடம் பிரியாவிடை பெற்று, ஆஸ்திரியா என்ற நாட்டின் தலைநகரமான வீயன்னா நகருக்கு அவர் சென்றார். அங்கே நடந்த யுத்த எதிர்ப் மாநாடு ஒன்றில் சிறப்பு அழைப்பின் பேரில் வரவேற்கப்பட்டார்.

அந்த ‘யுத்த எதிர்ப்பு மாநாட்டுக்கு’ உலகப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் சமாதானவாதியான பென்னர் பிராக்வே தலைமை தாங்கினார். அந்த மாநாட்டில் ராஜன் பாபுவும் கலந்து கொண்டு பேசும் போது,

“அன்பால்தான் உலகத்தில் வாழ முடியும். அகிம்சையால் தான் உலகம் உய்யும். முன்னேறும்” என்பதற்கான காந்திய தத்துவத்தின் சான்றுகளை எடுத்துக் காட்டி அற்புதமாகப் பேசினார்.

யுத்த எதிர்ப்பு மாநாட்டில் சிலர், கலகம் செய்வதற்கென்றே வந்திருந்தார்கள். அவர்கள் அப்போது கலகத்தை உருவாக்கி, மாநாட்டுத் தலைவர் பென்னர் பிராக்வேயையும், ராஜன் பாபுவையும் அடித்து நொறுக்கிப் படுகாயங்களை உண்டு பண்ணி விட்டார்கள். ராஜன் பாபு பட்ட அடி படுகாயங்களானதால், அந்த காயங்கள் ஆறுவதற்கு ஆறேழு வாரங்களாயின. அந்தக் காயங்கள் ஆறி உடல் நலம் தேறும்வரை ராஜேந்திர பிரசாத் வெளியே எங்கும் போக முடியாமல் படுத்த படுக்கையாகவே அவர் தங்கியிருந்த வீட்டில் சிகிச்சை பெற்றார்.

உடல் நலமானது. சிறிது காலம் ஐரோப்பா நாடுகளைச் சுற்றி அங்குள்ள மக்களின் சுதந்திர நிலைகளைக் கண்டுணர்ந்தார். குறிப்பாக, இந்திய நாட்டிலே இருந்து வெளிநாடு சுற்றுப் பயணம் போகிறவர்கள் எல்லாம், பெரும்பாலாக, தங்களது உடைகளை அந்தந்த நாடுகளின் பருவ நிலைகளுக்கு ஏற்றவாறும் தட்ப வெட்ப