பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

81


1950 ஆம் ஆண்டு, ஜனவரி 26 ஆம் நாளன்று, பாரதநாடு குடியரசு நாடாக மாறியது. குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடந்தது! இதில் ராஜன் பாபுவே போட்டியிட்டு, வெற்றியும் பெற்றார். பொதுவாழ்க்கைப் பொறுப்புடையவன் எவனாக இருந்தாலும் அவனுக்குத் தொண்டுள்ளமும், தியாகமும் தலைமையேற்று நடத்தும் பண்புமிருந்தால், அவனைத் தேடி நிச்சயமாக எப்படிப்பட்ட பதவியானாலும் வந்து சேரும்.

ஜனாதிபதி அதிகாரங்கள் ஒரு வரம்க்குட்பட்டவைதான் என்றாலும், பாரத அமைச்சரவைக்குத் தேவையான நேரங்களில், தேவையான அறிவுரைகளையும், உதவிகளையும் செய்து வந்தவர் பாபு. அவர், ஜனாதிபதி என்ற பெரும் பதவியிலே இருந்தாலும், அந்தப் பதவிக்கே அழகு சேர்த்தவர் என்பதற்கான எளிமையோடு வாழ்ந்தவர் ஆவார்.

மறுபடியும் இரண்டாவது முறையாவும் ராஜன் பாபுவே குடியரசுத் தலைவரானார். அரசியலில் அவருக்கு இருந்த ஒவ்வொரு காரியத்தின் மீதிருந்த கவனமும், விரோதியானாலும் சரி, அவனே நேராகவே பார்த்து சமரசம் செய்யும் பணிவான போக்கும், கருத்து வேறுபாடோ, முரண்பாடோ கொண்டு கட்சிப் பணிகளிலே இருந்து விலகி, மனம் குமுறும் தொண்டர்களையும், சில தலைவர்களையும் இணைக்கும் பாலமாக அவர் இயங்கும் கடமை ஆற்றலும்தான் ராஜன்பாபுவை மிகப் பெரிய மனிதராக மாற்றிற்று எனலாம்.

ராஜன் பாபுவின் உடன் பிறந்தவர் தமக்கை படவதிதேவி. அந்த அம்மையார் ராஜன் பாபுவைக் குழந்தையாக இருந்த நேரம் முதல் அவரது குடியரசுத் தலைவர் பதவி பெறும் காலம் வரை தனது கண்களைப் போல அல்லும் பகலும் பாதுகாத்து வளர்த்த அருந்தாய்