பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

87


இராஜேந்திர பிரசாத் பழமையைப் போற்றும் பண்பாளர். அதற்காக எதையும் குருட்டுத் தனமாக ஏற்று நடப்பவரல்ல! காலத்துக்கேற்ற கருத்துடன் அவற்றுக்கு மறு உருவழங்கும் சீர்த்திருத்தச் செம்மல்.

கலப்பு மணம், தீண்டாமமை விலக்கு, அறிவியல் கல்வி ஆகியவற்றை ஆதரித்து அதற்கான முன்னேற்றங்களுக்கு காலநிலைக்கேற்ப உதவி புரிந்தார். அதே நேரத்தில் பசுவதைத் தடுப்பு, மிருகபலி இவற்றை எதிர்த்துத் தடுத்து நிறுத்த வழி கண்டார்.

வேலைகளைச் செய்யும் போது இது பெரியது அது சிறியது என்று பாராமல், எந்த வேலைகளானாலும் அவற்றைத் தொடர்ந்து செய்து வெற்றி பெற உழைக்க வேண்டும் என்றார். தான் பேசும் பொதுக் கூட்டங்களிலும், கட்சிப் பணி கலந்தாலோசனைகளிலும், மாநாட்டுப் பேச்சுகளிலும் இதே எண்ணத்தைக் கூடியுள்ள மக்களுக்கு அறிவுரையாகச் சொல்லுவார்.

அதிகாலையிலே எழுந்திருப்பார், அலுவலகக் கோப்புகளைப் பார்த்து அவற்றிற்கேற்றவாறு குறிப்புகளை எழுதி முடித்து விடுவார். வந்துள்ள கடிதங்களுக்குரிய பதில்களையும் எழுதி அனுப்புவார். இந்து மதப் பண்பாடுகள் கெடாமல், தெய்வ பக்தி வழிபாடுகளைத் தவறாமல் செய்து வருவார்.

காலம் பொன்னானது, நேரத்தை வீணாக்காதே; காலத்தோடு கடமைகளைச் செய்து முடிப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்பது அவரது பொன்மொழியாகும்.

ராஜன் பாபுவிடம் பழகும் வாய்ப்பு ஒருமுறை பெற்றவர் கூட, பிறகு தவறாமல் வலிய வந்து காணுமாறு வந்தவர்களை