பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

பாப்பா முதல் பாட்டி வரை

இதனைக் கலர் டாப்ளர் ஸ்கேன் மூலம் அறிந்து, லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலம் சரி செய்யலாம். இதன் மூலம் உயிரணுக்களின் எண்ணிக்கை, வீரியம் அதிகரித்து, குழந்தைப் பேற்றுக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

இந்தச் சிகிச்சையின் மூலம் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரித்தும், பெண்ணின் கருமுட்டை உற்பத்தியாகும் சமயத்தில், ஆணின் விந்துவைப் பெற்று, அதில் சில ரசாயனங்களைச் சேர்த்துத் தரமான வீரியமுள்ள அணுக்களைப் பிரித்தெடுத்து கருப்பையில் செலுத்தலாம். கருப்பையினுள் விந்தினை ஏற்றும் இம் முறையைச் செயல்படுத்த, கருப்பைக் குழாயில் அடைப்பு இல்லாமல் இருத்தல் மிக அவசியம்.

பெண்களின் குறைபாடுகள் : ஹார்மோன் குறைபாடு, முட்டை உற்பத்தியில் குறைபாடு, கருக் குழாய் அடைப்பு, கருப்பையில் பிறவிக் குறைபாடு, கருப்பையில் கட்டி, முட்டைப் பையில் கட்டி, போன்றவை குழந்தைப் பேறின்மைக்கு வழிவகுக்கின்றன.

ஹார்மோன் குறைபாட்டை ரத்தப் பரிசோதனை மூலம் அறிந்து, தகுந்த சிகிச்சையின் மூலம் சரி செய்யலாம்.

முட்டை உற்பத்தியில் குறைபாடு : 30 சதவீதப் பெண்களுக்கு முட்டை சரியான காலகட்டத்தில் உற்பத்தி ஆகாததால் கருவுறும் வாய்ப்புக் குறைகிறது. இவர்களுக்கு முட்டைப் பையை ஊக்குவிக்க, மாத்திரை அல்லது ஹார்மோன் ஊசிகள் அளித்து, முட்டை உற்பத்தியைக் கருவக ஆய்வு (ovulation Study) மூலம் அறிந்து பையினுள் விந்த ஏற்துதல் மூலம் கருவுறச் செய்யலாம்.

கருக்குழாய் அடைப்பு : பெண்களின் பேறின்மைக்கு, இது முக்கியமான காரணமாகும். இதைக் கருப்பை