பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



குழல் இனிது, யாழ் இனிது மழலைச் சொல் இனிக்க...

காது நோய்கள் குறித்த விழிப்புணர்வு, இந்தியர்களிடையே மிகக் குறைவு. பார்வைத் திறனுக்குக் கொடுக்கப்படுவதைப் போல இல்லாவிடினும், அதற்கடுத்த இரண்டாம் பட்ச முக்கியத்துவமும் காதுக்குக் கொடுக்கப்படவில்லை. பலத்த சத்தங்களையும், கேட்க இயலாத அளவு கேட்கும் திறனை இழக்க நேரிட்டால், மட்டுமே, மருத்துவரை ஆலோசிக்கும் எண்ணம் மக்களுக்கு தோன்றுகிறது.

பெற்றோரே : மற்ற குழந்தைகளைப் போலப் பேச முடியாமல் போனாலும் கூட, குழந்தைக்குக் குறை உள்ளதென பெற்றோர்கள் யூகிப்பதில்லை. மாறாக, சிறிது வயதானதும், குழந்தை பேசத் துவங்கிவிடும் என்ற தவறான நம்பிக்கையில், குழந்தையின் பேசும் திறனை வளர்க்கும் முக்கியக் காலகட்டத்தை வீணடித்து விடுகின்றனர்.

ஊனத்தின் கொடிய வடிவம்: காது கேளாமை, ஊனத்தின் மிகக் கொடுமையான வடிவம் செவிப்புலன் இன்மையால், ஒரு மனிதனின் வாழ்க்கைப் பாதையே மாறிவிடும். பிறவி முதல் சாகும் வரை, செவிடராகவே வாழ்க்கையை முடித்த