பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

பாப்பா முதல் பாட்டி வரை

மாறும். பிறந்து கல்லீரல் செயல்படத் தொடங்குவதற்கான இயல்பான மாற்றம் இது. மஞ்சள் காமாலை நோய் அல்ல இது. ஆனால், பிறந்து இரண்டு நாள்களுக்கு உள்ளேயே கை, கால்கள் மஞ்சள் நிறமாக மாறினால் உடனடி சிகிச்சை அவசியம்.

பிறந்தவுடன் குழந்தை அழாமல் இருந்தால்: முதலில் தலை வருவதற்குப் பதிலாக கால் வருதல், பிரசவம் ஆவதற்கு முன்பே பனிக்குடம் உடைந்து விடுதல், கடினப் பிரசவம், உணவுக் குழாயில் அடைப்பு, தாயின் வயிற்றுக்குள்ளேயே குழந்தை மலம் கழித்துவிடுதல், நஞ்சுக்கொடி குழந்தையின் கழுத்தைச் சுற்றி இருத்தல், இரட்டைக் குழந்தைகள் ஆகியவை காரணமாக, குழந்தைகள் அழாமல் பிறக்கின்றன. இவ்வாறு தமிழகத்தில் 100க்கு 8 குழந்தைகள் பிறக்கின்றன. இது போன்று அழாமல் குழந்தைகள் பிறக்கும் நிலையில் உடனடி சிகிச்சை அவசியம். குழந்தை பிறந்த ஒரு நிமிஷத்துக்குள், செயற்கை சுவாசக் கருவியைக் கொண்டு (Resusciation Bag) சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மூச்சு அடைப்பு ஏற்பட்டு, குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துமனையில், இதுபோன்று 30 செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளன. பிரசவத்க்காகச் சேருவதற்கு முன்பு மருத்துமனையில் இந்த செயற்கை சுவாசக்கருவி உள்ளதா எனக் கர்ப்பிணிகள் கேட்டுத் தெரிந்து கொள்வது அவசியம்.

பிறந்த உடனேயே, மூச்சுவிட குழந்தை கஷ்டப்பட்டால், கையை விட்டுச்சளியை எடுப்பது தவறு. சளியை எடுக்க, சக்ஷன் பல்ப் (Suction Bulb) என்ற கருவி உள்ளது.