பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

143

குழுவினரின் முயற்சியால் பிறந்த அக் குழந்தையின் பெயர் லூயிஸா ப்ரெளன். தற்போது உலகம் முழுவதும் 5000த்துக்கும் மேற்பட்ட சோதனைக் குழாய்க் குழந்தைகள் உள்ளன.

இயற்கைக் கருத்தரிப்பு : கரு முட்டையும், ஆண் விந்துவில் உள்ள உயிர் அணுவும் இணைந்தால், கரு உண்டாகிறது. பெண்ணின் உடலில் சுரக்கும் சுரப்பி நீர்களின் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் கருவகத்திலிருந்து ஒரு கருமுட்டை உற்பத்தியாகி, வளர்ந்து, முதிர்ச்சி அடைந்து, கருவகத்திலிருந்து வெளியேறுகிறது.

மாதத்துக்கு ஒரு முறை வெளிவரும் கரு முட்டை, கரு இணைக் குழாயின் நுண்ணிய விரல்கள் போன்ற பகுதியால் உறிஞ்சப்படுகிறது. அச் சமயம் கணவன் - மனைவி உடல் உறவு கொள்ள நேர்ந்தால், விந்துவில் உள்ள உயிரணுக்கள் யோனிக் குழாய் வழியாகக் கருப்பையைக் கடந்து, கரு இணைக் குழாயில், கரு முட்டையைச் சந்தித்தால், கரு இணைப்பு உண்டாகிறது. நான்கு, ஐந்து நாட்களில் இந்த இணைந்த கரு, மேலும் வளர்ச்சி அடைந்து அதன் சுவரில் பதிந்து வளர ஆரம்பிக்கிறது. கரு பதிய கருப்பை சாதகமாக இருந்தால் தான், கரு பதிந்து குழந்தை வளரும். கருப்பை, கருவினை ஏற்கும் நிலையில் இல்லாமல், இருந்தாலும், கரு இணைப்பு ஏற்படவில்லை என்றாலும், மாதவிடாய் வந்து விடும்.

கருத்தரியாமைக்குக் காரணங்கள் : சில பெண்களுக்குக் கரு முட்டை, சரியாக உற்பத்தி ஆகாதால் மாதவிடாய் சரியாக வராது. சிலருக்கு மாதவிடாய் சரியாய் இருந்தும், கரு முட்டை உற்பத்தி சீராக இல்லாமல் இருக்கக்கூடும். மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களுக்குக் கருமுட்டை