பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

பாப்பா முதல் பாட்டி வரை

உற்பத்தியே இருக்காது. சிலருக்கு இளம் வயதிலேயே, அதாவது 25-35 வயதுக்குள்ளேயே கருவகம் செயலிழந்துவிடுகிறது. இதற்கு ‘ப்ரிமெச்சூர் ஒவேரியன் ஃபெயிலியா்’ (Premature OviraFailiure) என்று பெயா்.

கருப்பையின் கீழே சிறிய வாய் போன்ற பாகம் ‘சர்விக்ஸ்’ (Cervix) எனப்படுகிறது. கருப்பை வாய்ப் பகுதியில் உள்ள சுரப்பிகளில் இருந்து சுரக்கும் ‘மியுக்கல்’ எனும் திரவம் கருமுட்டை முதிர்ந்து வரும் நாளில் இளகி, உயிர் அணுக்கள் மேல்நோக்கிச் செல்ல உதவுகிறது. இதே திரவம் சில காரணங்களால் கெட்டியாகவும், எதிர்ப்பு சக்தி நிறைந்தும் இருந்தால், கரு இணைவதைத் தடுத்து விடுகிறது.

ஆண் விந்துவில் உள்ள குறைபாடு : ஆணிடமிருந்து வெளியாகும் விந்துவில், சாதாரணாக 60 முதல் 120 மில்லியன் உயிர் அணுக்களும், அவற்றில் 60-80 சதவீதம் சுறுசுறுப்பு உள்ளவையாகவும் இருக்கும். இந்த அளவிருந்து குறைந்து காணப்படும் உயிர் அணுக்கள் கருத்தரிப்பைத் தாமதிக்கும்.

சில தம்பதியருக்கு, எவ்விதக் குறைபாடும் இல்லாமலேயே கருத்தரிப்பு நிகழாமல் இருக்கக்கூடும். கரு இணைக் குழாயில் கருமுட்டை நுழைய வாய்ப்பு இல்லாமல் போவதே, பெரும்பாலும் இதற்குக் காரணம். இம் மாதிரி விவரிக்க இயலாத மலட்டுத் தன்மை உள்ள பெண்கள், எப்போது வேண்டுமானாலும் கருத்தரிக்க வாய்ப்புண்டு. ஆனால் 40 வயதுக்கு மேல் கருத்தரிக்கும் வாய்ப்புக் குறைந்து விடும்.

எதிர்ப்புச் சக்திகள் : ஆணின் விந்து அணுக்களுக்கு எதிராகப் பெண்ணின் உடலில், எதிர்ப்புச் சக்தி ஏற்படும். ஆணின் உடலில், ஆணின் விந்து அணுக்களுக்கே எதிராகச்