பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/168

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

167

தீர்வு. மூளை இறப்புக்கு உள்ளாகி, இதயம் மட்டும் இயங்கி கொண்டிருக்கும் குழந்தைகளின் இதயங்களைக் கொண்டு, இதுபோன்ற குழந்தைகளுக்கு மறு வாழ்வு கொடுக்க முடியும்.

இதய அறுவை சிகிச்சைக்கு உதவும் முக்கியக் கருவி: இதயத்தின் செயல்பாட்டையும், நுரையீரலின் செயல்பாட்டையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்தே இதயத்துக்குள் அறுவை சிகிச்சை செய்ய முடியும். இதற்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி என்று பெயர். இது போன்று இதயத்தையும் நுரையீரலையும் வெளியிலிருந்து செயற்கையாக செயல்பட வைக்க உதவும் ‘ஹார்ட்லங் மெஷின்’ (Heart Lun Machine) மிக முக்கியமானது. இந்தக் கருவி இல்லாமல் இதய அறுவை சிகிச்சை செய்ய முடியாது. இதய அறுவை சிகிச்சையின்போது, இதயம் சுருங்கி விரிவதை நிறுத்தி, இந்தக் கருவி மூலம் வெளியிலிருந்து உடலின் மற்ற உறுப்புகளின் செயல்பாட்டுக்கு ரத்தம் சப்ளை செய்யப்டுகிறது. ரத்தத்தில் ஆக்சிஜனைக் கலக்கும் பணியையும், இந்தக் கருவி வெளியிலேயே செய்து விடுகிறது.

துடித்துக்கொண்டு இருக்கும் இதயத்தின் செயல்பாடு அபூர்வமானது. விபத்து உள்பட, உயிருக்கு ஆபத்தான வகையில் சம்பவங்கள் நடைபெறும்போது, உடலில் அதிக அதிர்ச்சி ஏற்படுகிறது. அப்போது அட்ரீனல் சுரப்பி அதிகமாகச் சுரக்கிறது. இதனால், ரத்தக் குழாய்கள் சுருங்குகின்றன. ஆனால், அப்போதும் கூட உடலின் முக்கிய பாகங்களான மூளை, கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் ரத்தக் குழாய்கள் சுருங்காமல், மற்ற உறுப்புகளுக்குச் செல்லும் ரத்தக் குழாய்கள் மட்டுமே சுருங்குகின்றன. இதனால், மூளை, கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றுக்கு இதயத்திலிருந்து அதிக ரத்தம் செல்கிறது. உயிரைக் காக்கப் போராடும் இந்த அற்புதத்தை இதயம் தானாகவே செய்கிறது.

நுரையீரல் : கருவிலேயே இரண்டு நுரையீரல்கள் இருக்கும். இவற்றில் சிறு சிறு காற்றுப் பைகள் இருக்கும்.