பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/169

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

பாப்பா முதல் பாட்டி வரை

குழந்தை பிறந்து, முதல் மூச்சுவிடத் தொடங்கும்போது, நுரையீரல்கள் பெரிதாகும்.

சில குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு நுரையீரலில் உள்ள காற்றுப் பைகள், கருவிலேயே பெரிதாக இருக்கும். இது நல்லது அல்ல. அல்ட்ரா சவுண்ட் கருவி மூலம், இதைக் கருவிலேயே கண்டுபிடித்து விடலாம். இது போன்ற கருவிலேயே கோளாறு இருந்தால், குழந்தை நீலமாகப் பிறக்கும். பிறந்தவுடன் அறுவை சிகிச்சை செய்து, பாதிக்கப்பட்டுள்ள நுரையீரலை அகற்றினால் பிரச்சினை தீர்ந்துவிடும். இரண்டு நுரையீரல்களில், ஒரு நுரையீரலை அகற்றி விடுவதால், மீதம் இருக்கும் ஒரு நுரையீரலில் நோய் வராமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.

பொருள்களைக் குழந்தைகள் வாயில் போட்டுக் கொள்வதால் : புளியங்கொட்டை, நிலக்கடலை போன்ற சின்னச் சின்னப் பொருள்களைத் தெரியாமல் குழந்தைகள் வாயில் போட்டுக்கொள்வதால், மூச்சுக் குழலில் அடைப்பு ஏற்பட்டுத் திணறும். இது போன்ற தருணங்களில், ‘பிராங்கோஸ்கோப்’ (Bronchoscoe) என்ற கருவி மூலம், குழந்தை விழுங்கிய பொருளை வேளியே எடுத்துவிட முடியும். ஆனால், சில சமயங்களில் குழந்தைகள் பொருள்களை விழுங்கி இருந்தாலும், உடனடியாகப் பிரச்சினை வராமல் இருந்து, கொஞ்ச நாள் கழித்துத் தெரியவரும் போது, அது நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். அப்போது பாதிக்கப்பட்ட நுரையீரல் பகுதியை, அறுவை சிகிச்சை செய்து அகற்றி விடுவதுதான் நல்லது.

நுரையீரல் சீழ் கட்டி : இதயத்துக்கு உறைகள் இருப்பதுபோல நுரையீரல்களுக்கும் உறைகள் உள்ளன. நுரையீரலுக்கும் உறைக்கும் இடையில் சீழ் கட்டும்போது சீழை வெளியற்றி விட்டு, நுரையீரல் உறையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும்.