பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/196

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

195

படையால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய துணி சோப், சீப்பு, ஷேவிங் பிரஷ்களை, மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. நீண்ட நாட்கள் படை நோய் குணமடையாமல், இருந்தால், சர்க்கரை நோய் உள்ளதா எனப் பரிசோதிக்க வேண்டும். இதைக் குணப்படுத்துவதற்குரிய மருந்து, மாத்திரைகளை, டாக்டர்கள் ஆலோசனை பெற்று உட்கொள்ள வேண்டும்.

பூஞ்சைக் கிருமிகள் நுரையீரல், இதயம், மூளை, சிறுநீரகம், மற்றும் எலும்புகளைப் பாதிக்கும். உள்ளுறுப்புகளைப் பாதிப்பது, ‘மொனிலர்யாசிஸ்’ என்ற நோயாகும். இந் நோயை ஏற்படுத்தும் கிருமி சாதாரணமாக வாயிலும், குடல் பகுதியிலும் காணப்படும்.

நம் உடலில் சத்துக் குறையும்போது, இந்தக் கிருமி, பலவிதமான நோய்களை ஏற்படுத்துகிறது. உடல் பருமனாக உள்ளவர்களுக்கும், சர்க்கரை, புற்றுநோய் மற்றும் உடலில் தடுப்புச் சக்தி குறைகின்ற நோய்கள் ஏற்படும் போதும், இந்தக் கிருமியால் பாதிப்பு ஏற்படும். பாதிக்கப்பட்ட இடங்களில் ஜி.வி. பெயின்ட் தடவினால் நல்ல பயனைத் தரும்.

சொறி சிரங்கு : எளிதில் பரவும் இந்த நோய், ‘சார்காப்டஸ் ஸ்கேபிஐ’ என்ற கிருமியால் உண்டாகிறது. இந்த நோய், சுகாதாரக் குறைவால் ஏற்படுகிறது. நெரிசலான பகுதியில் வசிப்பவர்கள், இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் மற்றும் இளவயதினரை இந்த நோய் அதிகம் தாக்குகிறது.

இந்த நோயின் பின் விளைவாகக் கொப்புளங்களும், கரப்பானும், சிறுநீரகங்கள் பாதிப்பும், ஏற்படலாம். சுகாதாரத்தின் மூலமே, இந்த நோயைக் கட்டுப்படுத்த