பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

பாப்பா முதல் பாட்டி வரை

வயிற்றுவலி : காரணம் 1. பாலில் உண்டாகும் லாக்டிக் அமிலம் குடலின் உட்புறத்துள்ள மெல்லிய தொலை உறுத்துவது. 2. சீரணமாகாத புரோட்டீன் பெருங்கட்டிகளாகக் குடலில் தேங்கிக் கிடப்பது. 3. சீரணக் கோளாற்றினால் குடலில் வாயுத்தேக்கம் ஏற்படுவது.

நோய்க் குறிகள்: 1. குழந்தை திடீர் என்று அழும். சிறிது நேரம் அழுது துடித்த பின்பு தானே ஓயும். மறுபடியும் திடீரென்று வீறிட்டு அழும். பசி, காதுவலி, சிறுநீரகத்தில் கல், கணை நோய், மூளை மந்தம் முதலியன ஏற்படுகையிலும், குழந்தை மேற்சொன்னவாறு விட்டுவிட்டு அழக்கூடும். 2. வயிறு கல்போல் கடினமாகக் கைக்குத் தென்படும். 3. அழும் பொழுது குழந்தை கால்களிரண்டையும் மேலுக்குத் தூக்கிக் கொண்டு அழும். 4. அதிகமாகத் துடித்து அழுதால், இழுப்பு ஏற்படலாம். 5. வயிற்றில் தேங்கியிருக்கும் காற்று வெளிப்பட்டவுடன் சட்டென அழுகை ஒய்ந்து போகும்.

சிகிச்சை : வயிற்றின் மீது லேசாகச் சிறிதளவு டர்ப்பன்ட்டைன் எண்ணையைப் பூசி, வெந்நீர்ப் பையினால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். வயிற்றின் மீது ஆளிவிதை அல்லது கடுகு அரைத்துப் பூசுவதும் நலம். மலத்தேக்கம் இல்லாமல் செய்யக் கிளிசரினும், வெந்நீரும் கலந்த எனிமா கொடுத்துக் குடலைச் சுத்தப்படுத்தல் நலம். குடலில் தேங்கியிருக்கும் வாயுவை வெளிப்படுத்த, இரண்டு அல்லது நான்கு சொட்டுப் பெப்பர்மின்டு நீர் கொடுப்பது நலம். ஆனால் அடிக்கடி வயிற்று வலி குழந்தைக்கு வராது தடுப்பது தான் உகந்த சிகிச்சையாகும். தாய்ப்பால் மட்டும் உண்ணும் குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் வேளைகளை ஒழுங்காகக் கவனித்துக் கொடுக்க வேண்டும். நினைத்த பொழுதெல்லாம் தாய்ப்பால் அளித்தல் தவறு. பால் எளிதில் சீரணமடைவதற்காக இரண்டு கிரெயின்