பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

பாப்பா முதல் பாட்டி வரை

இருமலுடன் கோழை வெளிப்படும். இருமி வெளியேறும் கோழையை வெளியே துப்பத் தெரியாத குழந்தை, அதை விழுங்கி விடுவதனால் மலத்திலும் வாந்தியிலும் கோழையைக் காணலாம். இதைத் தவிர தொண்டை, மார்பு, முதுகு முதலிய இடத்தில் கையை வைத்துப் பார்த்தால், கர்கர் என்ற ஒலியை உணரலாம். கோழை நிறைந்துள்ள மூச்சுக் குழல்களுக்குள் சுவாசம் சிரமப்பட்டு வெளியேறும் பொழுது, இவ்விதமான ஒலி உண்டாகிறது.

சிகிச்சை : இருமலின் காரணத்தைப் பொறுத்துள்ளது. தொண்டை காய்ந்து போவதினால், இருமல் வருவதாக இருந்தால், படுக்கப் போகும் முன் குழந்தைக்கு நல்ல சூடான பால் கொஞ்சம் கொடுக்க வேண்டும். மாண்டில் ஸ்பெயிண்டு, ரிசார்லான் பெய்ன்டு போன்ற தொண்டைக்குத் தடவும் மருந்துகளைத் தடவினாலும் இருமல் குறையும். குழந்தையின் உணவில் வைட்டமின் ‘ஏ’ அதிகம் இருந்தால் இந் நோய் வராமல் இருக்காது. இந்த இருமலில் அவதிப்படும் குழந்தைக்குத் தினசரி இரண்டு தேக்கரண்டியளவு மீன் எண்ணெய் படுக்கப்போகும் முன் கொடுப்பது நலம். உள்நாக்கு நீண்டிருப்பதால் ஏற்படும் இருமலுக்கு நீண்ட பாகத்தைக் கத்தரித்துச் சரிப்படுத்தி விட்டால் இருமல் நின்றுவிடும். தொண்டைச் சதையும், அடினாய்டும் வீங்கியதால் ஏற்படும் இருமலுக்குத் தொண்டை, மூக்கு, காது வைத்திய நிபுணரிடம் சிசிச்சை பெறுவது நலம்.

காய்ச்சல் : இது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல. பல நோய்களின் வெளிப்படையான ஒரு சின்னம். சளிப்பு நோயிலிருந்து தொற்று நோய்கள் வரை, எந்த விதமான நோயும், காய்ச்சல் சின்னத்துடன் தான் தொடங்குகின்றன. சில சமயம் குழந்தைக்குக் சாதாரணமாக உடல் வெப்பநிலை, மாலை வேளைகளில் 990 பா. அல்லது 1000