பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

பாப்பா முதல் பாட்டி வரை

மூளை உறை அழற்சி (Menngitis) : 1. போலி மூளை உறை அழற்சி. 2. மூளை உறை அழற்சி என இருவகைப்படும்.

போலி மூளை உறை அழற்சி : நிமோனியா, பெரியம்மை போன்ற கொடிய நோய்களின் போது, கிருமிகளால் உற்பத்தியாகும் நஞ்சு, மூளையையும் பாதிப்பதால், மூளை சன்னி கொண்ட நிலையில், மந்தமாகக் காணப்படும். இந்நிலை அதிக நேரம் நீடிக்காது, தானே குறைந்து சரியாகி விடும். ஆகவே இதைப் போலி மூளை உளை அழற்சி என்று அழைப்பது பொருத்தமாகும்.

மூளை உறை அழற்சி நோய்யிகுறிகள் : இதை மூன்று நிலையில் காணலாம். முதல் நிலை : தலைவலி, வாந்தி, மலச்சிக்கலுடன், சில சமயம் தொடங்கும். சில சமயங்களில் காய்ச்சல், வாந்தி, தலைவலி, வலிப்பு என வரும். இரண்டாம் நிலை : முதல் நிலையில் தொடங்கிய தலை நோவு மிகவும் அதிகமாகிக் குழந்தை அலறும். இதைச் சன்னி வேகம் என்று அழைப்பது வழக்கம். சிறு குழந்தைகளுக்குத் தலை ஊச்சியில் உள்ள குழி மறைந்து வெளியே வீக்கம்போல் உப்பிக் காணப்படும். காய்ச்சல் இந்நிலையில் மிகவும் அதிகமாக இருக்கும். கண்களில் உள்ள பாவை சிறுத்து காணப்படும். கழுத்தின் பின்புறமுள்ள தசைகளும், முதுகுத் தண்டும் கடினமாகக் காணப்படும். கைகால்களில் உள்ள தசைகள் துடிக்கும். மூன்றாம் நிலை : மூளையில் ஏற்படும் ரணத்திலிருந்த கசியும் நீரின் தேக்கத்தினால், மூளை அமுக்கப்படுவதினாலும், மூளை நீர் நன்றாப் பரவ ஓடமுடியாது தேக்கப்படுவதினாலும், பக்கவாதம் ஏற்படுகின்றது. மூளையில், எந்தப் பாகம் பாதிக்கப்படுகின்றதோ, அதற்குத் தக்கபடி, இந்நோயின் குறிகள் தென்படும். ஒன்றரைக்கண், முழுக்குருடு, செவிடு, முகத்து நரம்பு பாதிக்கப்படல், பக்கவாதம் முதலியன