பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

பாப்பா முதல் பாட்டி வரை

அறிகுறி. முகத்தில், கன்னத்தின் மீது மெல்லத் தட்டினால், அங்குள்ள முக நரம்பு அதிர்ச்சியுற்றுக் கன்னத்துத் தசை துடிக்கத் துவங்கும். இந்த அறிகுறி தென்பட்டால், நரம்புமண்டலம் மிகவும் மெலிந்த நிலையில் உள்ளது என அறிந்து, தக்க சிகிச்சை செய்யவேண்டும்.

மாந்த இரைப்பு (Laryngsmus strdulus) : ) இது பல் முளைக்கும் பருவத்தில் காணப்படும். பெரும்பாலும் இதற்கு இலக்காகும் குழந்தைகள், ஏற்கெனவே கணைய நோயினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

நோய்க்குறி : குரல்வளை வாயில் (Giots) இசிவுகண்டு வருவதால் நுரையீரலுக்குக் காற்றுப்போக முடியாது தடங்கல் ஏற்பட்டு விடுகின்றது. அதனால் மூச்சு நன்றாகச் சுவாசிக்க இயலாது, திணறல் ஏற்படுகின்றது. விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீரென்று சுவாசிக்க முடியாது, தலையைப் பின்பக்கம் சாய்த்துக்கொண்டு, முகம் நீலமாகித் திடீரென்று கொளகொளவென்று விநோதமான ஒலியுண்டாக்கும். சிறிது பொழுது எதையோ கண்டு பயந்தது போல் அழுதுவிட்டுப், பிறகு மறுபடியும் விளையாட்டில் ஈடுபடும். இது மிகவும் அபாயகரமானதொரு கோளாறு. சில சமயம் மூச்சுத் திணறல் அதிகமாகி விட்டால், குழந்தை மரணமடைவதும் உண்டு. இதைத் தான் மாந்தம் என்கிறார்கள்.

சிகிச்சை : இசிவின்போது முகத்தில் குளிர்ந்த நீரைத் தெளிக்கவேண்டும். கழுத்தின் மீது சூடான ஒத்தடம் கொடுப்பதும் நன்மை பயக்கும். இசிவு மிகவும் மும்முரமாக இருந்தால், சிறிது குளோரோபாரம் மயக்கம் கொடுப்பதும் அதைத்தடுக்கும் ஒரு முறையாம். இத்தகைய இசிவு வராது தடுப்பதுதான் நல்ல சிகிச்சையாகும். இந்தக் குழந்தைகளை அடித்துத் துயரப்படுத்தி, மனச் சங்கடம் உண்டாக்காது பாதுகாக்கவேண்டும். நரம்பு மண்டலத்தை