பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

பாப்பா முதல் பாட்டி வரை

இப்போது வரதட்சிணைக் கொடுமையாலும், சில சமயங்களில் தன் சுகத்தை மறந்து, குடும்ப வருமானத்துக்கு ஆதாரமாகப் பெண் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாலும் திருமணங்கள் தாமதப்படுகின்றன. ஆனால், ஒரு சில பெண்கள் உயர்தர வாழ்க்கையை மனத்தில் கொண்டு, படிப்பு, வேலை எனத் திருமணத்தைத் தள்ளிப் போடுகின்றனர். ஒருசில பெண்கள், சூழ்நிலை சாதகமாக வரும்போது, குழந்தை பெற்றுக் கொள்ளலாம் எனக்கருதி கர்ப்பம் தரிப்பதைத் தள்ளிப் போடுகின்றனர். இக் காரணங்களால் வயது அதிகரித்து, பேறு கடினமாகி சிசேரியன் அதிகரித்துள்ளது.

உயர் ரத்த அழுத்தம் : கர்ப்பம் தரிக்கும்நிலையில், குழந்தையின் கழிவுகளையும் சேர்த்து வெளியேற்ற ஏதுவாக, தாயின் சிறுநீரகங்களுக்குச் சுமை அதிகரிக்கிறது. இதனால் முதல் பேறு (தலைச்சன்) கர்ப்பிணிகளில் பலருக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை ஏற்பட வாயப்புண்டு. பிரசவ நேரத்தில் உயர் ரத்த அழுத்தம் காரணமாகத் தாய்க்கு வலிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. வலிப்பு தீவிரமாக இருக்கும் நிலையில், கருவிலே குழந்தை இறந்துவிடும். இது போன்ற சூழ்நிலையில் வலிப்பைக் கட்டுப்படுத்தி, சிசேரியன் அறுவைசிகிச்சை செய்து தாயையும் சேயையும், காப்பாற்ற முடிகிறது. இதேபோன்று, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்கள், பிறவியிலிருந்தே இதயக் கோளாறு உள்ளவர்களுக்கு முன்பெல்லாம் குழந்தைப் பேறு என்பது எட்டாக்கனியாக இருந்தது. தற்போது இது போன்ற கோளாறு உள்ளவர்களுக்கும் கூட சிசேரியன் உதவுகிறது.

சர்க்கரை நோய் இருந்தால் : 100 ஆண்டுகளுக்கு முன்பு, பெண்ணுக்குச் சர்க்கரை நோய் இருந்தால், அவள்