பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைணவக் далдавилл, வேதத்தல்... 莎 இராமனுஜருக்குப் பிறகு கி.பி. பதினோராவது நூற்றாண்டில் நிம்பார்க்கர் என, ஒரு தைலாங்கு (Thailang) பிராமணர் திகழ்ந்ததாக, பொதுவாகக் கருதப் பெறுகிறது. மற்றைய வைணவ வேதாந்திகளைப்போல் நிம்பார்க்கரும் முப்பொருள் உண்மையினை ஏற்கிறார். மூன்று பொருள்களும் என்றென்றும் இருப்பன. உண்மை யாவன. அவை பிரமம், சித் அல்லத உணர்வுடையது, அசித் அல்லது உணர்வு அற்றது ஆகும். பரம்பொருள் அல்லது பிரமத்தை நிம்பார்க்கர் கிருஷ்ணன் அல்லது ‘ஹரி என அழைக்கிறார். பிரமம் என்ற சொல்லிற்குப் பொருள் பெருமையை உடையது என்பதாகும். அதாவது, எது பெருமையுடை யதோ அதுவே பிரமம் ஆகும். ஈடும், எடுப்பும் இல்லாத ஒன்றே பிரமம் ஆகும். பிரமத்தின் இயல்புகளும், ஆற்றல் களும் ஒப்பற்ற நிலையிலும் உயர்வு அற்ற நிலையிலும் சிறந்து விளங்குவனவாகும். பிரமமே பரந்த இவ்வு லகுக்கும் ஆன்மாக்களுக்கும் காரணமாகும். இப்பிர பஞ்சம் பிரமத்தினின்று தோன்றுகிறது; பிரமத்தில் நிலை பெறுகிறது; பிரமத்தில் ஒடுங்குகிறது. பிரமமே, இப்பிர