பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

த.கோவிந்தன்


மறை நூல் அருளியவர்கள் நேராக உள் உணர்வினாலே-வளர்க்கப்பெற்ற சிந்தனையின் மேம்படுகின்ற ஆற்றலாலே, கடந்த உண்மைகளைத் தெளிகின்றனர். நிம்பார்க்கர் இறைவனை நேராக அறிதல் கூடும் என்பதை மறுக்கவில்லை.நிம்பார்க்கர் இயற்கை ஆற்றல் மிக்கோரைச் சாதாரண மக்களினின்றும் பிரிக்கிறார்.

சாதாரண மக்களிடம் அமையும் சிந்திக்கும் திறன், முதிர்ச்சி,குறைந்ததாகவும் நிறைவு அற்றதாகவும். இருப்பதால் இறைவனை அறியத் தவறுகின்றனர். இவர்கட்கு மறை நூல்களைக் கொண்டே வேண்டும். தவறுகின்றது. இவர்கள்,மறைநூல்கள்,உயர்த்தப்பெற்ற சிந்தனைகளின் பதிவாகவும், அறிவு மிக்கோர், முதிர்ந்த மனமுடையோர் ஆகியோரது நேரிய உணர்வுகளின் பதிவாகவும் விளங்குகின்றன.

முதிர்ச்சியுடையோர்களுக்குச் சிந்தனை ஆற்றல் ஆழ வளர்ச்சிபெற்று முடிவு பெற்றுள்ளது. இவ்வளர்ச்சி யினாலும், முதிர்வினாலும் இறைவனை நேராக உள் உணர்வினாலே உணர்கின்ற திறமை ஏற்படுகிறது. ஆதலால், இறைவனை அறிவினால் அல்லது வளர்ச்சியுற்ற மேம்படுகின்ற அறிவினால் உணர்வினால் அறியப் பெறலாம். இவ்வாறு நிம்பார்க்கர் கூறுவதை நாம் விடாப்பிடியாக அவர் கூறுவதாகக் கொள்வதற்கு இல்லை.

இந்திய மெய்ப்பொருளியலார் நிம்பார்க்கர் பிடிவாதமான ஒரு கொள்கையினை வற்புறுத்துகின்ற குற்றத்தைச் செய்வதாகக் கூறுவது தவறாகும். நிம்பார்க்கர் கொள்ளும் பிடிவாதமான கருத்து யாது? மறை வல்லார் வெளிப்படுத்தியுள்ள நூல்களில் அடைந்துள்ள கருத்துகளைத் தலைமையுடையவனவாகக் கொள்ளுதலும், திறன் ஆய்வு இன்றி நம்புதலும், பிடிவாதமாகும்.