பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

த. கோவேந்தன்


மூன்றாவது உள்பொருளாவது, 'அசித்' ஆகும்.இது அறிவற்றது. நிம்பார்க்கர் கருத்துப்படி அசித் மூவகைப்படும். முதலாவது, இவ்வுலகின் முதற்பொருளாகிய பிரகிருதியினின்று தோன்றுவன. இவை. பிராகிருதம் எனப்படும். இரண்டாவது, பிரகிருதியினின்று, தோன்றாதவை, அபிராகிருதம் எனப்படும். இவை, பொருளளல்லாத ஒன்றினின்று தோன்றுவன. ஆனால் அறிவற்றதாக உள்ள ஒன்றினின்றே தோன்றுவனவாகும். பிரம உலகினின்று இவை தோற்றம் கொள்கின்றன. மூன்றா வது. காலம் ஆகும்.

மதிப்பீடு

நிம்பார்க்கர் தந்த வேதாந்தக் கருத்து முறையின் அடிப்படைத் தத்துவங்களின் சுருங்கிய உரை மேலே தரப்பெற்றது. வேதாந்தத்துள் ஐவகை மூலக்கருத்து முறைகள் உள்ளன.

ஒன்று, சங்கரரது 'கேவலாத்வைவாதம்' இதனைக் கடுமையான அத்துவைதம் என்று கூறுவர். இராமானுஜரது கொள்கை விசிஷ்டாத்வைதம் எனப்பெயர் பெறும். இதனை அடைமொழியேற்ற அத்துவிதம் என்பர். நிம்பார்க்கரது கொள்கை துவைதாத்வைத வாதம் என்பர்.இது சுவைதரும், அத்துவிதமும் கலந்தது மாத்வரது கொள்கை துவைத வாதம்.என்படும். உள்பொருள் இரண்டு, என்ற கொள்கையை மாத்வர் வற்புறுத்துகிறார்.

வல்லபர் வற்புறுத்துவது, சுத்தாத்வைதவாதமாகும். இது கலப்பில்லாத தூய அத்துவிதமாகும். இங்கு எழுகின்ற முக்கியக் கேள்வி, உள்பொருள் ஒன்றாக இருக்கும் பிரமத்திற்கும் பன்மைக் காட்சி வழங்கும் உலகினுக்கும், என்ன உறவு? பிரபஞ்சத்திற்கும் பிரமத்திற் கும் இடையே அமையும் உறவு முற்றிலும் அபேதமாக உள்ளதா? அல்லது பேதமாக உள்ளதா? அல்லது பேதாபேதம் ஆக உள்ளதா?