பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120 த. கோவேந்தன்

டத்தும் தன்னையே ஒப்புவித்து உறவு கொள்ளுதலே சமயமாகும்.

   அறிவின்றி இறைவனது ஆணை வழி நிற்றல் சமயம் அன்று. இறைவனது பெருமையும், மாட்சியும் ஒருவனைப் பெரிதும் வியப்பிலே தொடக்கத்தில் ஆழ்த்தினாலும், நெடிது காலம் தொலைவிலேயே இறைவனின்று நீங்கியிருத்தல் இயலாது. தவிர்க்கவொணாத நிலையில் இறைவன் மனிதனால் ஈர்க்கப்பெறுதலும், மனிதன் இறைவனால் ஈர்க்கப்பெறுதலும் உண்டு. தோழமை உறவிலே இறைவனும், மனிதனும் ஒன்றுகின்றனர்.
   நிம்பார்க்கர் வைணவ மெய்ப்பொருளியலாருள் முதன்மையாக மாதுர்ய பிரதான பக்தியை வற்புறுத்தியுள்ளார். இறைவனது எல்லையில்லாத இனிமையை நினைத்து பக்தி மேலிடுதலே மாதுர்யபிரதான பக்தி யாகும். இறைவனது அளவிடமுடியாதப் பெருமையை நினைந்து பணிந்து பக்தி மிகுதலாவது ஐஸ்வரிய பிரதான பக்தியாகும். இந்தப் பக்தியை விட்டு மாதுர்ய பிரதான பக்தியை நிம்பார்க்கர் வற்புறுத்தினார். இராமானுஜரும் மாத்வரும், ஐஸ்வரிய பிரதான பக்தியினை வற்புறுத்தியோர் ஆவர்.
   அறநோக்கைக் கொண்டு, நிம்பார்க்கரது கருத்துகளைக் கருதினால், வெற்றுச் சடங்கினைப் புறநிலையில் மட்டும் போற்றுவதை நிம்பார்க்கர் விரும்பவில்லை. அக நிலையில் சீரிய பண்புகளைப் பயிலுதலையே வற்புறுத்தினார். அறப் பண்புகளாகிய தன்னடக்கம், எளிமை, தூய்மைபோன்ற பிற பண்புகளைப் பயிலுதல் வேண்டும். இல்லற வாழ்வினை ஒருவன் துறக்க வேண்டுவதில்லை. வீடு பேற்றிற்கு இல்லறத்துறவு வேண்டுவதில்லை என்பது நிம்பார்க்கர் கருத்தாகும். எந்நோக்கு கொண்டு, எவ்வளவு பாங்கோடு கடமைகள் ஆற்றப்பெற்றுகின்றன என்பதே இங்கு முக்கியமாகும். மனிதன் தனது நிலையி.